உரிம முகாமைத்துவ முறைமை மற்றும் சம்பவ அறிக்கையிடல் முறைமை
உரிம முகாமைத்துவ முறைமை மற்றும் சம்பவ அறிக்கையிடல் முறைமை

கேள்வி அறிவித்தல் – இரண்டு இணைய அடிப்படையிலான தகவல் அமைப்புகளை உருவாக்குவது முன்மொழிவுகளுக்கான கோரிக்கை

உரிம முகாமைத்துவ முறைமை மற்றும் சம்பவ அறிக்கையிடல் முறைமை

இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு மென்பொருள் விருத்தி அமைப்புகளிடமிருந்து கீழே குறிப்பிட்டுள்ள இரண்டு கேள்வி அறிவித்தலுக்கு முத்திரையிடப்பட்ட விலைமனு கோரல்களை அழைக்கிறது.

 மனு இலக்கம் 01 – இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவில் உரிம முகாமைத்துவ முறைமையை (LMS) நடைமுறைப்படுத்தல், விநியோகித்தல், நிறுவுதல் மற்றும் அதிகாரமளித்தல். கீழே இவற்றுக்கான வழிகாட்டல்கள் மற்றும் படிவங்கள் இணைக்கப்பட்டுள்ளன. பதிவிறக்கவும்.

Tender_Document-Annexure_I.pdf

RFP-LMS-Annexure_II.pdf

 மனு இலக்கம் 02 – இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவில் சம்பவ அறிக்கையிடல் முறைமையை (IRS) நடைமுறைப்படுத்தல், விநியோகித்தல், நிறுவுதல் மற்றும் அதிகாரமளித்தல். கீழே இவற்றுக்கான வழிகாட்டல்கள் மற்றும் படிவங்கள் இணைக்கப்பட்டுள்ளன. பதிவிறக்கவும்.

மேற்குறிப்பிட்ட இணைய அடிப்படையிலான இரண்டு தகவல் முறைமைகளையும் இரண்டு தனித்தனி தகவல் முறைமைகளாக உருவாக்க வேண்டியது அவசியம். மேலும், விலைமனுக் கோரிக்கையை சமர்ப்பிக்கவுள்ளவர்கள் இரண்டு தனித்தனியாக முத்திரையிடப்பட்ட கடிதவுறையில்; இடதுபக்க மேல் மூலையில் எந்த விடயத்துக்காக விண்ணப்பிக்கின்றீர்கள் (உ+ம்: விலைமனு 01 அல்லது விலைமனு 02) என்பதை தௌpவாக குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். 2020 ஜூலை 23 ஆம் திகதி பிற்பகல் 2.30 மணிக்குள் கீழேயுள்ள முகவரிக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
குறித்த முன்மொழிவுகளுக்கான கோரிக்கையை சமர்ப்பிப்பதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் விலைமனுப்பத்திரங்களையும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் www.pucsl.gov.lk எனும் உத்தியோகபூர்வ இணையதளத்தில் காணலாம். விலை மனுக்கள் அன்றைய தினமே திறக்கப்படுவதோடு, விண்ணப்பதாரர்கள் அல்லது பிரதிநிதிகள் கலந்துகொள்ள அழைக்கப்படுகின்றார்கள்.

இது தொடர்பாக 2020 ஜூலை 14 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அலுவலகத்தில் முன்னாயத்த கூட்டமொன்று மனு கோரிக்கையாளர்களுக்கென நடத்தப்படும், மேலும், இந்த விடயம் குறித்த மனுதாரர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். மேலதிக தகவல்களுக்கு (011) 2392608 தொடர்புகொள்ளவும்.

தலைவர்
பெறுகை நிபுணர் குழு,
இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு
6-வது மாடி, இலங்கை வங்கி வர்த்தகக் கோபுரம்,
28இ புனித மைக்கல்ஸ் வீதி,
கொழும்பு 03.

திகதி: ஜீலை 02, 2020