உள்நாட்டு சூரிய சக்தி
கூரைக்கு மேலான சூரிய சக்திப் படல் பொருத்துகை

 

உங்கள் வீட்டில் சூரிய சக்திப் படல் ஒன்றை பொருத்துவதற்கு நீங்கள் எவற்றைப் பரிசீலிக்க வேண்டும்?

 

1. கூரையின் வலிமை

சந்தையில் பல்வேறுபட்ட கொள்ளளவுடைய சூரிய சக்திப் படல்கள் உள்ளன. 320 வற்கள் உள்ள சூரிய சக்திப் படல் ஒன்றின் சராசரி நிறை 23 கிலோகிராம் ஆகும். 2 கிலோவற்கள் சூரிய சக்தி நிலையத்தை உற்பத்தி செய்யவோ அல்லது அமைக்கவோ விரும்பினால், நீங்கள் 6 சூரிய சக்திப் படல்களை பொருத்த வேண்டும். அவற்றின் நிறை 138 கிலோகிராம் ஆகும்.

கொள்ளளவுடன் இணைந்ததாக கூரை மீதுள்ள பாரமும் அதிகரிக்கும். அதனால் கூரையின் உறுதித்தன்மை தொடர்பில் அவதானமாக இருக்கவும்.

 

2. கூரை பெறும் ஒளியின் அளவு

மேற்கூரை பெறும் ஒளியானது வீட்டைச் சுற்றியுள்ள மரங்கள் மற்றும் கட்டிடங்களால் குறையக் கூடும். அது போன்ற தடைகளை குறைப்பதற்கு இயன்ற அளவு முயலுங்கள்.

 

3. சூரிய சக்தி நிலையத்தை பொருத்துவதற்கான நிறுவனத்தை தேர்தல்.

சூரிய சக்திப் படல்களைப் பொருத்தும் நிறுவனங்கள் இலங்கையில் அதிக எண்ணிக்கையில் உள்ளன. இலங்கை நிலைபெறுதகு வலு அதிகாரசபையில் அந்நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதே விதிமுறை ஆகும். அதனால் இலங்கை நிலைபெறுதகு வலு அதிகாரசபையில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு நிறுவனத்தை தேர்வது முக்கியமானது. ஒரு பதிவு செய்யாத நிறுவனத்தின் மூலம் பொருத்துகையை மேற்கொண்டால், உங்களது சூரியப் படல்களை தேசிய மின்கட்டமைப்பிற்கு இணைப்பதில் பிரச்சினைகள் வரலாம்.

நீங்கள் கோரும் கொள்ளளவுக்கான சூரிய சக்திப் படல்கள் மற்றும் இன்வேர்ட்டர்களைப் பொருத்தும் பணியை, பதிவு செய்யப்பட்ட ஒரு சூரியப்படல் பொருத்தும் நிறுவனமே சிறந்த முறையில் ஆற்றும்.

 

4. ஒரு சூரியப் படல்

சந்தையில் பல வகையான சூரியப் படல்கள் கிடைக்கின்றன. அதனால், ஒரு சூரியப்படலைத் தெரிவு செய்யும் போது, வினைத்திறன் மற்றும் ஆயுள் ஆகியவற்றில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். வகை “A” சூரியப் படல் ஆனது, ஆகச் சிறந்த வினைத்திறனும் ஆயுளும் உள்ள படல் என அங்கீகரிக்கப்பட்டது ஆகும்.

 

ஓர் உள்நாட்டு சூரிய மின்சக்தி நிலையத்திடமிருந்து நீங்கள் எதை எதிர்பார்க்கின்றீர்கள்?

உங்கள் வீட்டில் சூரிய சக்திப் படலை வைத்திருக்கத் தேவை என்பதற்கு இரு காரணங்கள் இருக்கக் கூடும்.

1. உங்கள் மாதாந்த மின் நுகர்வுக்கு தேவையான மின்சாரத்தைப் பிறப்பித்தல்.

 

நெட் மீட்டரிங் 

உங்களின் மாதாந்த மின் நுகர்வினை ஈடு செய்வதற்கு தேவையான கொள்ளளவு கொண்ட ஒரு சூரிய சக்தி நிலையத்தை நீங்கள் பொருத்தலாம். இதுவே “நெட் மீட்டரிங் எண்ணக்கரு”. எவ்வாறாயினும் இந்தச் செயன்முறை ஊடாக நீங்கள் மின்சாரத்தை விற்க முடியாது.

ஆகவே, உங்கள் மாதாந்த மின் நுகர்வின் அலகுகளை ஈடு செய்வதற்கு என நீங்கள் பொருத்தும் சூரியப் படலின் கொள்ளளவினை தீர்மானிப்பது முக்கியமாகிறது.

 

• உதாரணம்: நீங்கள் மாதாந்தம் 200 மின் அலகுகளை நுகர்பவராயின், இரு கிலோவற்(kW) கொள்ளளவு உடைய ஒரு சூரிய சக்திப் படல் ஆனது, அந்த நுகர்வை ஈடுசெய்யப் போதுமானது. (1kW= மாதத்திற்கு 115-120 அலகுகள்)

 

• 2 கிலோவற் சூரிய சக்தி நிலையத்திற்கான முதலீடு அண்ணளவாக, ஐந்து லட்சம் ரூபாய்கள் ஆகும்.

 

• நீங்கள் ஒவ்வொரு மாதமும் 200 அலகுகள் மின்சாரத்தை நுகர்ந்தீர்களாயின், உங்கள் முதலீட்டினை மீளஅடைவதற்கு நெடுங்காலம் பிடிக்கும்.

 

• நுகர்வை விட அதிக மின்சாரத்தை நீங்கள் உற்பத்தி செய்வீர்களாக இருப்பின், அந்த உபரி மின்சாரத்தின் அலகுகள் கணக்கிடப்பட்டு அவை உங்கள் கணக்கில் வைப்பிலிடப்படும். அத்துடன், அவ்வாறு உங்கள் கணக்கில் வைப்பிலிடப்படும் மின் அலகு எண்ணிக்கைக்குரிய மின்சாரத்தை நீங்கள் 10 ஆண்டு காலத்தினுள் பயன்படுத்தி முடிக்கலாம். நீங்கள் குறித்த 10 ஆண்டு காலத்தினுள் அந்த மின் அலகுகளைப் பயன்படுத்தாவிடின், அவை உங்கள் கணக்கிலிருந்து அகற்றப்படும்.

 

2. வருமானம் ஈட்டும் நோக்குடன் சூரிய மின் சக்தியினைப் பிறப்பித்தல்.

இந்தச் செயன்முறைக்கு ஆதரவளிக்கும் வகையில் இரு முறைகள் உள்ளன.

 

நெட் அக்கவுண்டிங்

• நெட் அக்கவுண்டிங் முறையின், தேசிய மின்கட்டமைப்பு வாயிலாக நுகரப்படும் மின்சாரத்தை விட, சூரிய சக்தியால் உருவாக்கப்படும் மின்சாரத்தின் அளவு கூடுதலாக இருப்பின், அந்த உபரி மின்சாரத்திற்கான பணத்தை நுகர்வோரானவர் கொடுப்பனவாகப் பெறுவார். வரித்தீர்வையானது முதல் 7 ஆண்டுகளுக்கு அலகிற்கு (1 கிலோவற் மணித்தியாலம்) ரூ.22 ஆகவும் அதன் பின் ரூ.15.50 ஆகவும் அமைக்கப்பட்டுள்ளது.

 

• நீங்கள் பிறப்பிக்கும் மின்சாரத்தை விட, உங்கள் மின் நுகர்வு அதிகரிப்பின் மட்டுமே, அதிகரித்த மின் அலகுகளுக்கான கட்டணத்தை நீங்கள் செலுத்த வேண்டும்.

 

நெட் பிளஸ்

• இம்முறையினிலே, மின்கட்டமைப்பில் இருந்து எவ்வளவு மின்சாரத்தை நுகர்வோர் நுகர்கின்றார் என்பதற்கும், சூரியப்படலில் இருந்து எவ்வளவு மின்சக்தி பிறப்பிக்கப்பட்டு மின்கட்டமைப்பிற்கு அளிக்கப்படுகின்றது என்பதற்கும் இடையில் எந்தவித சம்பந்தமும் இல்லை. மின்கட்டமைப்பில் இருந்து நுகரப்படும் மின்சாரத்திற்கு உரிய கட்டணத்தை நுகர்வோர் செலுத்தியாக வேண்டும். அதே வேளை பிறப்பிக்கப்பட்டு மின் கட்டமைப்பிற்கு அளிக்கப்படும் மின்சாரத்திற்கு உரிய கொடுப்பனவு ஆனது, அலகொன்றிற்கு ரூ.22 என்ற ரீதியில், தனியாக வழங்கப்படும்.

வீட்டுச் சூரிய சக்திப் பிறப்பாக்கத்தை முன்னிறுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு முன்னெடுத்த செயற்பாடுகள் எவை?

• மின்சாரத்தை பிறப்பிப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அளிக்கும் உரிமம் அவசியம். மின்சாரத்தைப் பிறப்பிக்கும் இந்த முறையின் ஊடாக, அனைத்து நுகர்வோர்களும் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு உரிமம் தேவையில்லை என்பதற்கான சட்டபூர்வ அனுமதி (உரிமம் தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவித்தல் விடுக்கப்பட்டமை.)

• மின்சாரத்தை பிறப்பிப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அளிக்கும் உரிமம் அவசியம். மின்சாரத்தைப் பிறப்பிக்கும் இந்த முறையின் ஊடாக, அனைத்து நுகர்வோர்களும் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு உரிமம் தேவையில்லை என்பதற்கான சட்டபூர்வ அனுமதி (உரிமம் தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவித்தல் விடுக்கப்பட்டமை.)

• வீட்டு சூரிய சக்தி நிலையத்திற்கும் தேசிய மின் கட்டமைப்பிற்கும் இடையிலான தொடர்பினை விரைவுபடுத்தும் வகையில் பரிந்துரைகள் வெளியிடப்பட்டமை. அதற்கமைய இலங்கை மின்சார சபை மற்றும் லங்கா எலெக்ரிசிட்டி தனியார் நிறுவனம் ஆகிய மின்சேவை வழங்குநர்கள், விண்ணப்பித்த திகதியில் இருந்து இரு வாரங்களுக்குள் வீட்டு சூரிய சக்தி நிலையத்தினை தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்க வேண்டும். தேசிய மின் கட்டமைப்புடனான இணைப்பு மற்றும் நெட் மீட்டரிங், நெட் அக்கவுண்டிங் அல்லது நெட் பிளஸ் உடன்படிக்கை கைச்சாத்திடல் ஆகியவை நிறைவேற்றப்படலை, கீழ் உள்ள காலச் சட்டக எல்லைக்குள் உறுதிசெய்யுமாறு, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது இ.மி.ச. மற்றும் லங்கா எலெக்ரிசிட்டி தனியார் நிறுவனம் ஆகியவற்றை கோரியுள்ளது.

 

1. நெட் மீட்டர் பொருத்துகைக்கான மதிப்பீட்டினைத் தருவதற்கான அதிகபட்ச ஏற்றுக்கொள்ளக்கூடிய காலம் ஆனது, உரிய விண்ணப்பக் கட்டணத்துடன், முழுதாக நிரப்பப்பட்ட நெட் மீட்டரிங் விண்ணப்பப் படிவம் சமர்ப்பிக்கப்பட்ட திகதியில் இருந்து ஒரு வாரம் ஆகும்.

2. நெட் மீட்டர் பொருத்துகைக்கான அதிகபட்ச ஏற்றுக்கொள்ளக்கூடிய காலம் ஆனது, நெட் மீட்டர் பொருத்துகைக்கான கட்டணம் சமர்ப்பிக்கப்பட்ட திகதியில் இருந்து ஒரு வாரம் ஆகும்.

மேலும் வாசிக்க →