பிணக்குத் தீர்வுச் செயன்முறை
Steps taken by the PUCSL to mediate the Disputes Lodged to the Commission

படிமுறை 01

மத்தியஸ்தம், ஆர்பிற்றேஷன் அல்லது நீதி முறைமை போன்ற முறைகளில் பிணக்கினைத் தீர்ப்பதற்கான சிறந்த முறை எது என்பது பற்றி பரிசீலிக்கப்படும்.

படிமுறை 02

இரு தரப்பினரும் மத்தியஸ்தம் அல்லது சட்ட நடவடிக்கையினூடாக பிணக்கை தீர்க்க முற்படுமிடத்து, ஒரு பிணக்கினை தீர்ப்பதற்குப் பொருத்தமான நடவடிக்கை எது என்பது இரு தரப்பினருக்கும் தெரியப்படுத்தப் படும்.

படிமுறை 03

மத்தியஸ்தம் ஊடாக பிணக்கினைத் தீர்ப்பதற்கான சிறந்த வழிவகை தேரப்படுமிடத்து, பிணக்கில் தொடர்புடைய இரு தரப்பினரும் பிணக்குகளைத் தீர்ப்பதற்கான விதிகளின் பகுதி 1ல் குறிப்பிட்ட செயன்முறைக்கு ஏற்ப, பிணக்கைத் தீர்த்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப் படுவார்கள்.

படிமுறை 04

இரு தரப்பினராலும் மத்தியஸ்தம் ஊடாக பிணக்கினைத் தீர்க்க முடியாதவிடத்து அப்பிணக்கினைத் தீர்க்கும் செயற்பாட்டினுள் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவை உள் நுழையுமாறு எவரேனும் ஒரு தரப்பு அழைக்க முடியும்.

படிமுறை 05

ஆணைக்குழுவின் சம்பந்தப்படுகையுடன் இருதரப்பும் ஒரு தீர்வுக்கு உடன்படின், ஆணைக்குழுவானது இரு தரப்பிற்கும் ஒரு சான்றிதழினை வழங்கும்.

படிமுறை 06

ஆணைக்குழுவின் சம்பந்தப்படுகையுடன் பிணக்கில் சம்பந்தப்பட்டுள்ள இருதரப்பினரும் ஒரு தீர்வுக்கு வர முடியாத பட்சத்தில், பிணக்குத் தீர்க்கப்படவில்லை என்ற சான்றிதழினை ஆணைக்குழு வழங்கும்.