பொது ஆலோசனை கேட்டல்

கூரை மீதான சூரிய படல்கள் மூலம் மின்சார உற்பத்தியை விருத்தி செய்வதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய   ஒழுங்குறுத்துகை மாற்றங்கள் தொடர்பான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்வதற்காக, 2002 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டத்தின் 17வது பிரிவின் கீழ், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பொது ஆலோசனைகளை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளது. இந்த மாற்றங்களின் நோக்கம் குறைந்த மின்னழுத்த விநியோக அமைப்பில் மின்னழுத்த உயர்வினால் மின்மாற்று திசையாக்கி ((inverter), செயலிழப்பு (tripping) சிக்கலைத் தீர்ப்பதன் மூலம் சூரிய மின்சக்தி அமைப்புகளில் மின்சார உற்பத்தியை அதிகரிப்பதாகும்

 

  • முதலாவது அணுகுமுறையாக, தேசிய மின்சார கட்டமைப்பின் தாழ் மின்னழுத்த வலையமைப்புடன் இணைக்கப்பட்ட கூரைமேலான சூரியப்படல் அமைப்புகளின் இன்வெர்ட்டர்களில் மின்னழுத்த தர பதில் செயன்முறைகளை (வோல்ட்-வார், வோல்ட்-வாட்) செயல்படுத்துதல்.
  • முதலாவது அணுகுமுறைக்கு பின்னரும் குறித்த சிக்கல்கள் நீடித்தால் இரண்டாவது அணுகுமுறையாக தாள் அழுத்த மின் விநியோகத்தில் அனுமதிக்கப்பட்ட மின்னழுத்தமான 230V இலிருந்து 10% அதிகமாகவோ, குறைவாகவோ அனுமதித்தல் (230V ±10%).

Event Date: 17 Apr 2024 - 17 May 2024

Stakeholder Consultation on Potential Regulatory Changes

Please Post Your Comment & Reviews

Your email address will not be published. Required fields are marked *