வாடகை அடிப்படையிலான வாகனமொன்றை தலைவருக்காக பெறல்
வாடகை அடிப்படையிலான வாகனமொன்றை தலைவருக்காக பெறல்

விலைமனு கோரல்

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL), தலைவருக்கு வாடகை அடிப்படையிலான வாகனத்தை வழங்குவதற்கு பொருத்தமான சேவை வழங்குநர்களிடமிருந்து முத்திரையிடப்பட்ட விலைமனு அழைக்கிறது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைகுழுவிற்கு குறித்த சேவை வழங்கப்படும்.

ஒரு வருட  கால வாகன வாடகைக்கு விலை மனு இதன் மூலம் கோரப்படுகின்றன. ஆக குறைந்தபட்சத் தேவைகள், ஏனைய தகவல்கள் மற்றும் நிபந்தனைகள் பற்றிய விபரங்கள், ஆவணங்களை www.pucsl.gov.lk/Notices என்ற எமது இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.

முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட மற்றும் முத்திரையிடப்பட்ட விலை மனு கோரல் ஆவணங்கள் 2026 ஜூன் மாதம்  25 ஆம் திகதி பிற்பகல் 2:30 மணிக்கு முன்னர் அல்லது குறித்த திகதிக்கு முன்னர் தபால் மூலம் அனுப்பிவைக்கப்பட வேண்டும் அல்லது கீழுள்ள முகவரியில் ஒப்படைக்க வேண்டும், மேலும் கடித உறையின் மேல் பக்க இடது மூலையில் “தலைவருக்கு வாடகை வாகனத்திற்கான கொள்முதல்” என்று குறிப்பிடப்பட வேண்டும்..

மேலதிக தகவலுக்கு பதில் மனிதவள பணிப்பாளரை 0770126246/ 0112 392 607/8 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.

 

தலைவர்

பெறுநர் குழு

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

6வது மாடி, இலங்கை வங்கி வர்த்தக கோபுரம்,

இலக்கம்- 28, சென்.மைக்கெல் வீதி,

கொழும்பு 3