நுகர்வோர் ஆலோசனைக் குழு உறுப்பினர் (வடமாகாணம்)
நுகர்வோர் ஆலோசனைக் குழு உறுப்பினர் (வடமாகாணம்)

நுகர்வோர் ஆலோசனைக் குழுவின் (நு.ஆ.கு) வடமாகாண உறுப்பினருக்கான பதவி வெற்றிடத்திற்காக தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் வட மாகாணத்தில் வதியும் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பில் ஆர்வமுடை அத்துடன் நு.ஆ.கு உறுப்பினராக நியமனம் பெற விரும்பும் விண்ணப்பத்தார்களிடமிருந்து கோரப்படுகின்றன.

வடக்கு மாகாணத்தின் மாகாண உறுப்பினர் பதவி வெற்றிடமாகவுள்ள நிலையில், விண்ணப்பங்கள் வடக்கு மாகாணத்தில் நிரந்தர வதிவிடத்தைக் கொண்டவர்களிடமிருந்து அழைக்கப்படுகின்றன, மேலும் அவர்கள் நுகர்வோர் பாதுகாப்பில் ஆர்வமாக உள்ளவர்களாக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் பின்வரும் பண்புகளை கொண்டிருத்தல் வேண்டும்:
இவ் அறிவித்தல் திகதி அன்று 65 வயதிற்கும் குறைவானவர்.
• சமூக / சமூதாய சேவைகளில் (நுகர்வோர் நலன்களில் விரும்பத்தக்கது) நிரூபிக்கத்தக்க ஈடுபாடுகளை உடையவர்.
• சிங்களம் அல்லது தமிழ் மொழிகளுக்கு மேலதிகமாக ஆங்கில மொழியில் பணியாற்றக் கூடிய அறிவு.

அனைத்து விண்ணப்ப படிவங்களும் கீழ்வருவனவற்றை உள்ளடக்குதல் வேண்டும்:
• “இலங்கையில் நுகர்வோர் பாதுகாப்பு” என்ற தலைப்பில் ஒரு சுருக்கக் கட்டுரை (500 சொற்களுக்கு மேற்படாதது)
• கிராம உத்தியோகத்தரினால் வழங்கப்பட்ட வதிவிடச் சான்றிதல்.
• குறித்த பிரதேச சமூக தலைவர் ஒருவர் வழங்கிய நற்சான்றிதழ் பத்திரம்:

தகவல்கள் பூரணப்படுத்திய விணப்பப்படிவங்கள் 25.02.2020 திகதிக்கு முன்னர் சமர்ப்பித்தல் வேண்டும். விண்ணப்பிக்கும் பதவி கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் குறிப்பிடப்பட வேண்டும்.

தலைவர்
இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு
இலக்கம் 28, புனித மைக்கல் வீதி,
கொழும்பு 03
தொலைபேசி: (011) 2392607/8 தொலைநகல்: (011) 2392641
இணையதளம்: www.pucsl,gov.lk
2020.02.11