முகாமைத்துவ உதவியாளர் (வெற்றிடம் 01)
இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (இபொபஆ) 2002 இன் 35 ஆம் இலக்க சட்டத்தின் மூலம் நாட்டில் பல்துறைசார் ஒழுங்குறுத்துகை நிறுவனமாக திகழ்கிறது. 2009 இன் 20 ஆம் இலக்க இலங்கை மின்சார சட்டத்தின் பிரகாரம் ஆணைக்குழு மின்சாரத்துறையில் ஒழுங்குறுத்துகை மேற்கொள்ளும் அதேநேரம் மின்சார துறையின் பொருளாதாரம், பாதுகாப்பு முகாமைத்துவ ஒழுங்குறுத்துகையை மேற்கொண்டும் வருகின்றது.
ஆணைக்குழுவில் வெற்றிடமாகவுள்ள பதவிகளை நிரப்ப தகுதியான விண்ணப்பத்தாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
அ) அறிக்கையிடல் – பாவனையாளர் பிரிவு பணிப்பாளர்
ஆ) தகுதிகள்
• க.பொ.த (உஃத) பரீட்சையில் 03 முக்கிய பாடங்களில் (பொது அறிவு மற்றும் பொது ஆங்கிலம் தவிர) தேர்ச்சி ஒரே தடவையில் சித்தி பெற்றிருக்க வேண்டும்.
மற்றும்
• க.பொ.த (சா/த) ஒரே அமர்வில் ஆங்கிலம், சிங்கள / தமிழ் மொழிகள் மற்றும் கணித பாடத்தில் திறமைச் சித்தி உள்ளிட்ட ஆறு (06) பாடங்களுடன் தேர்வு.
இ) தேவையான அனுபவம் மற்றும் திறன்கள்
• தரவு பகுப்பாய்வு தொடர்பான முன் அனுபவம்.
• சிறந்த தொடர்பாடல் திறன்
• மின்சாரத் தொழில்த்துறை அல்லது ஒழுங்குறுத்துகை தொடர்பிலான முன் அனுபவம் கூடுதல் தகைமையாக கருதப்படும்.
ஈ) வயது
• இந்த விளம்பரம் பிரசுரித்த திகதிக்கு 18-30 வயதுக்குட்பட்டிருத்தல்.
மேற்குறிப்பிட்ட பதவிநிலைக்கான கவர்ச்சியான ஊதியம் மற்றும் பல சலுகைகள் உள்ளடக்கப்படும். மிகவும் உயர்வான தகுதிகள் மற்றும் பொருத்தமான அனுபவங்களைக் கொண்டவர்கள் என்ற அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். மேலும், நேர்காணலில் விண்ணப்பதாரியின் ஆர்வ வெளிப்பாடு கருத்தில் கொள்ளப்படும்.
முழுப்பெயர், விலாசம், தொலைபேசி இலக்கம், பிறந்த திகதி, தேசியம், கல்வி மற்றும் தொழில் தகைமைகள், பதவிக்கு பொருத்தமான அனுபவம் மற்றும் ஏனைய விபரங்களை உறவினரல்லாத இருவரது பெயர், விலாசம் மற்றும் தொலைபேசி இலக்கம் ஆகிய விடயங்கள் அடங்கிய உங்களது விண்ணப்பப் படிவத்தை முகப்பு கடிதத்துடன் இணைத்து கீழ் காணப்படும் விலாசத்திற்கு அல்லது மின்னஞ்சல் மூலம் 21.08.2020 என்ற திகதியிலோ அல்லது அத்திகதிக்கு முன்பாகவோ கிடைக்கப்பெறும் வகையில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். விண்ணப்பிக்கும் பதவி கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் அல்லது மின்னஞ்சலில் விடயப்பரப்பில் (Subject) குறிப்பிடப்பட வேண்டும்.
தலைவர்
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு
6 ஆவது மாடி, இலங்கை வங்கி வர்த்தக கோபுரம்,
இல.28, சென். மைக்கல் வீதி,
கொழும்பு – 03
தொலைபேசி: 011- 2392608/7 பெக்ஸ்: 011-2392641
ஈ-மெயில்: careers@pucsl.gov.lk இணையதளம்: pucsl.gov.lk
2020.08.07