உதவிப் பணிப்பாளர் பெருநிறுவன தொடர்பாடல் (தகவல் முகாமைத்துவம்)
உதவிப் பணிப்பாளர் பெருநிறுவன தொடர்பாடல் (தகவல் முகாமைத்துவம்)

உதவிப் பணிப்பாளர் பெருநிறுவன தொடர்பாடல் (தகவல் முகாமைத்துவம்) –

(வெற்றிடம் 01) ஒப்பந்த அடிப்படையில்

இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (இபொபஆ) 2002 இன் 35 ஆம் இலக்க சட்டத்தின் மூலம் நாட்டில் பல்துறைசார் ஒழுங்குறுத்துகை நிறுவனமாக திகழ்கிறது. 2009 இன் 20 ஆம் இலக்க இலங்கை மின்சார சட்டத்தின் பிரகாரம் ஆணைக்குழு மின்சாரத்துறையில் ஒழுங்குறுத்துகை மேற்கொள்ளும் அதேநேரம் மின்சார துறையின் பொருளாதாரம், பாதுகாப்பு முகாமைத்துவ ஒழுங்குறுத்துகையை மேற்கொண்டும் வருகின்றது.

ஆணைக்குழுவில் வெற்றிடமாகவுள்ள பதவிகளை நிரப்ப தகுதியான விண்ணப்பத்தாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

அ) அறிக்கையிடல்
• பெருநிறுவன தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளருக்கு அறிக்கையிடல்

ஆ) கல்வித்தகைமை
• பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பொருத்தமான முதன்மை பட்டம் பெற்றிருத்தல்

இ) முக்கிய பொறுப்புகள்
பல துறைகளை ஒழுங்குறுத்தும் அமைப்பு என்ற ரீதியில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுடன் தொடர்புடைய இலங்கை மின்சாரம் சட்டம் (எதிர்காலத்தில் அறிமுகமாகும் சட்டங்கள் உட்பட) இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டங்களின் கீழ் வழங்கப்பட வேண்டிய ஆவணங்கள் மற்றும் தகவல்களின் திறன் மற்றும் தயாரிப்பு முறையை பராமரித்தல், அனைத்து பங்குதாரர்களுக்கும் செயல்திறன்மிக்க தகவல்களை வழங்குவதற்கான முறையை பராமரிப்பதற்கு பொறுப்பாக இருத்தல் வேண்டும். தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களைப் பரப்புவதற்கான அமைப்பைப் பராமரிப்பதற்கும் பொறுப்பாக செயற்படுதல்.

ஈ) அனுபவம்
பின்வரும் துறைகளில் குறைந்தபட்சம் (03) மூன்று ஆண்டுக்கால பிந்தைய தகுதி அனுபவம் கொண்டிருத்தல் வேண்டும்.
• தரவைச் சேகரிப்பதிலும் தொகுப்பதிலும் வலுவான திறன் கொண்டிருத்தல்.
• அறிக்கை எழுதுதல் மற்றும் தொகுத்து வழங்குவதற்கான திறனை கொண்டிருத்தல்.
• மக்கள் தொடர்புகளில் ஈடுபாட்டை உள்ளடக்கிய நிகழ்வுகளை ஏற்பாடு செய்தல் மற்றும் நிகழ்வுகளை முகாமைத்துவம் செய்யும் திறனை நிரூபித்தல்.
• .ஆங்கிலத்தில் உயர் தேர்ச்சி. ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளில் நல்ல எழுத்து திறனை கொண்டிருத்தல் வேண்டும்.
• வலைத்தள நிர்வாகம் மற்றும் சமூக ஊடகங்களை கையாள்வதில் அனுபவம்
• ஒழுங்குறுத்தல் நிறுவனத்தில் பணி அனுபவத்தை கொண்டிருத்தல் கூடுதல் தகைமையாகும்.

உ) வயது
• 35 வயதிற்கு குறைவாக இருத்தல்

மேற்குறிப்பிட்ட பதவிநிலைக்கான கவர்ச்சியான ஊதியம் மற்றும் பல சலுகைகள் உள்ளடக்கப்படும். மிகவும் உயர்வான தகுதிகள் மற்றும் பொருத்தமான அனுபவங்களைக் கொண்டவர்கள் என்ற அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். மேலும், நேர்காணலில் விண்ணப்பதாரியின் ஆர்வ வெளிப்பாடு கருத்தில் கொள்ளப்படும்.

முழுப்பெயர், விலாசம், தொலைபேசி இலக்கம், பிறந்த திகதி, தேசியம், கல்வி மற்றும் தொழில் தகைமைகள், பதவிக்கு பொருத்தமான அனுபவம் மற்றும் ஏனைய விபரங்களை உறவினரல்லாத இருவரது பெயர், விலாசம் மற்றும் தொலைபேசி இலக்கம் ஆகிய விடயங்கள் அடங்கிய உங்களது விண்ணப்பப் படிவத்தை முகப்பு கடிதத்துடன் இணைத்து கீழ் காணப்படும் விலாசத்திற்கு அல்லது மின்னஞ்சல் மூலம் 21.08.2020 என்ற திகதியிலோ அல்லது அத்திகதிக்கு முன்பாகவோ கிடைக்கப்பெறும் வகையில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். விண்ணப்பிக்கும் பதவி கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் அல்லது மின்னஞ்சலில் விடயப்பரப்பில் (Subject) குறிப்பிடப்பட வேண்டும்.

தலைவர்
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு
6 ஆவது மாடி, இலங்கை வங்கி வர்த்தக கோபுரம்,
இல.28, சென். மைக்கல் வீதி,
கொழும்பு – 03
தொலைபேசி: 011- 2392608/7 பெக்ஸ்: 011-2392641
ஈ-மெயில்: careers@pucsl.gov.lk                     இணையதளம்: pucsl.gov.lk

2020.08.07