பதவி வெற்றிடம் – முகாமைத்துவ உதவியாளர் (வெற்றிடம் 02)
பதவி வெற்றிடம் – முகாமைத்துவ உதவியாளர் (வெற்றிடம் 02)

இலங்கை பொதுபயன்பாடுகள் ஆணைக்குழு

இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (இபொபஆ) 2002 இன் 35 ஆம் இலக்க சட்டத்தின் மூலம் நாட்டில் பல்துறைசார் ஒழுங்குறுத்துகை நிறுவனமாக திகழ்கிறது. 2009 இன் 20 ஆம் இலக்க இலங்கை மின்சார சட்டத்தின் பிரகாரம் ஆணைக்குழு மின்சாரத்துறையில் ஒழுங்குறுத்துகை மேற்கொள்ளும் அதேநேரம் மின்சார துறையின் பொருளாதாரம், பாதுகாப்பு முகாமைத்துவ ஒழுங்குறுத்துகையை மேற்கொண்டும் வருகின்றது. ஆணைக்குழுவில் வெற்றிடமாகவுள்ள குறித்த பதவிகளை நிரப்ப தகுதியான விண்ணப்பத்தாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

முகாமைத்துவ உதவியாளர் (வெற்றிடம் 02)

அ) தகுதிகள்

• க.பொ.த (உ/த) பரீட்சையில் 03 முக்கிய பாடங்களில் (பொது அறிவு மற்றும் பொது ஆங்கிலம் தவிர) ஒரே தடவையில் சித்தி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும்

• க.பொ.த (சா/த) ஒரே அமர்வில் ஆங்கிலம், சிங்கள / தமிழ் மொழிகள் மற்றும் கணித பாடத்தில் திறமைச் சித்தி உள்ளிட்ட ஆறு (06) பாடங்களுடன் தேர்வு.

• குறித்த துறையில் 03 வருடத்திற்கு குறையாத முன் அனுபவம்.

ஆ) வயது

• 25 வயதுக்குட்பட்டிருத்தல் வேண்டும்

மேலதிக நன்மைகள்

• ஊழியர் மற்றும் குடும்பத்தை உள்ளடக்கிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம்.

• சொத்து மற்றும் வாகன கடன் வட்டி திரும்பப் பெறுதல்.

• வெளிவாரி பட்டப்படிப்பு கட்டணத்தை திரும்பப் பெறுதல்.

மேற்குறிப்பிட்ட பதவிநிலைக்கான கவர்ச்சியான ஊதியம் மற்றும் பல சலுகைகள் உள்ளடக்கப்படும். மிகவும் உயர்வான தகுதிகள் மற்றும் பொருத்தமான அனுபவங்களைக் கொண்டவர்கள் என்ற அடிப்படையில் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். மேலும், நேர்காணலில் விண்ணப்பதாரியின் ஆர்வ வெளிப்பாடு கருத்தில் கொள்ளப்படும். முழுப்பெயர், விலாசம், தொலைபேசி இலக்கம், பிறந்த திகதி, தேசியம், கல்வி மற்றும் தொழில் தகைமைகள், பதவிக்கு பொருத்தமான அனுபவம் மற்றும் ஏனைய விபரங்களை உறவினரல்லாத இருவரது பெயர்,விலாசம் மற்றும் தொலைபேசி இலக்கம் ஆகிய விடயங்கள் அடங்கிய உங்களது விண்ணப்பப் படிவத்தை முகப்பு கடிதத்துடன் இணைத்து கீழ் காணப்படும் விலாசத்திற்கு அல்லது மின்னஞ்சல் மூலம் 20.03.2022 என்ற திகதியிலோ அல்லது அந்த திகதிக்கு முன்பாகவோ கிடைக்கப்பெறும் வகையில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். விண்ணப்பிக்கும் பதவி கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் அல்லது மின்னஞ்சலில் விடயப்பரப்பில் (Subject) குறிப்பிடப்பட வேண்டும்.

தலைவர்

இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு

6வது மாடி, இலங்கை வங்கி வர்த்தகக் கோபுரம்

28, செயின்ட் மைக்கேல்ஸ் வீதி,

கொழும்பு 03

தொலைபேசி: 011- 2392608/7 பெக்ஸ்: 011-2392641

ஈ-மெயில்: careers@pucsl.gov.lk

இணையதளம்: www.pucsl.gov.lk

திகதி: 06 மார்ச் 2022