உதவி பணிப்பாளர் –பெருநிறுவனத் தொடர்பாடல்கள் (ஆங்கிலம்) (பதவி – 01)
அறிக்கையிடல்:
பணிப்பாளர் – பெருநிறுவனத் தொடர்பாடல்கள்
தகுதிகள் மற்றும் அனுபவம்
• இலங்கை பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் (ஆங்கில மொழிமூல) பத்திரிகை/ வெகுஜன ஊடகம்/ ஊடகக் கலைகள் தொழில்நுட்பத்தில் அல்லது இவற்றுடன் தொடர்புபட்ட வேறு ஏதேனும் பட்டம் இளங்கலைப் பட்டம்
• பெருநிறுவன தொடர்பு, மக்கள் தொடர்பு அல்லது பத்திரிகைத் துறையில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம்
• எழுத்து மற்றும் பேச்சு ஆங்கிலம் இரண்டிலும் சிறந்த தேர்ச்சி
• வலைப்பதிவு எழுதுதல், பெருநிறுவன அறிக்கை எழுதுதல், சமூக ஊடக உள்ளடக்க விருத்தி மற்றும் வலைத் தள நிர்வாகத்தில் அனுபவம்
வயது: 35 வயதுக்குக் குறைவானது
முகாமைத்துவஉதவியாளர் – மனிதவள மற்றும் நிர்வாகம் (பதவி – 01)
அறிக்கையிடல் :
பணிப்பாளர் – மனிதவள மற்றும் நிர்வாகம்
தகுதிகள் மற்றும் அனுபவம்
அறிக்கையிடல் :
பணிப்பாளர் – மனிதவள மற்றும் நிர்வாகம்
தகுதிகள் மற்றும் அனுபவம்
- க.பொ.த. (உயர்தரம்) பரீட்ச்சையில் ஒரே அமர்வில் 03 பிரதான பாடங்களுக்கு (பொது பரீட்ச்சை மற்றும் பொது ஆங்கிலம் தவிர) குறைந்தபட்ச திறமை சித்திகளைப் பெற்றிருக்க வேண்டும்.
- க.பொ.த. சா/த) பரீட்ச்சையில் குறைந்தபட்சம் ஆறு (06) பாடங்களுடன், ஆங்கிலம் மற்றும் கணித பாடத்திற்கான திறமை சித்திகளுடன் ஒரே அமர்வில் சித்திபெற்றிருக்க வேண்டும்
- மனிதவள மற்றும் முகாமைத்துவ, முன் வரவேற்பறை கையாளும் திறன் மற்றும் மக்கள் தொடர்பாடல் துறையில் வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- வயது: 30 வயதுக்குக் குறைவாக இருத்தல்
பொது நிபந்தனைகள்
- மேற்கண்ட பதவி கவர்ச்சிகரமான ஊதியம் மற்றும் பிற சலுகைகளை வழங்குகிறது.
- அதிகபட்ச தகுதிகள் மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் குறுகிய பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள், மேலும் நேர்காணல்/ போட்டித் பரீட்ச்சையில்தேர்ச்சி பெற்ற செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு தேர்வு செய்யப்படும்.
- முழுப் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கங்கள், பிறந்ததிகதி, வயது, தேசியம், கல்வி மற்றும் தொழில்முறை தகுதிகள், தொடர்புடைய அனுபவம் மற்றும் உறவினர் அல்லாத இருவரது விபரங்களுடன் கூடிய முகப்பு கடிதம் (கவர் லெட்டர்) கூடிய விண்ணப்பம், 23ஆம் திகதி மே மாதம் 2025 அன்று அல்லது அதற்கு முன்னர் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட வேண்டும்.
- விண்ணப்பிக்கும்பதவி நிலையை கடித உறையின் மேல்பக்க இடது மூலையில் அல்லது மின்னஞ்சலின் தலைப்பில் குறிப்பிடவும்.
தபாலில் அனுப்ப: பணிப்பாளர் – மனிதவள மற்றும் நிர்வாகம்
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு
06-வது மாடி, இலங்கை வங்கி வர்த்தகக் கோபுரம்,
இலக்கம் 28, புனித மைக்கல் வீதி,
கொழும்பு 03
மின்னஞ்சல் மூலம்: careers@pucsl.gov.lk
தலைவர்
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு
தொலைபேசி: (011) 292607/8
இணையதளம்: www.pucsl.gov.lk
09.05.2025