உத்தேசிக்கப்பட்டுள்ள மின்சாரக் கட்டணம் 2024 பொது ஆலோசனை கேட்டல்
உத்தேசிக்கப்பட்டுள்ள மின்சாரக் கட்டணம் 2024 பொது ஆலோசனை கேட்டல்

(2002 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டத்தின் 17 வது பிரிவின் கீழான பொது அறிவிப்பு)

2009 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் 30 ஆவது பிரிவின் கீழ்இ உரிமதாரரால் (இலங்கை மின்சாரசபை) 2024 ஆம் ஆண்டிற்கான உத்தேசிக்கப்பட்ட மின்சாரக் கட்டணத்தைப் பற்றிய பொது ஆலோசனை கேட்டலை நடத்துவதற்கான முடிவை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இதன் மூலம் அறிவிக்கிறது.

இலங்கை மின்சார சபை. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட மின்சாரக் கட்டணத் திருத்த முன்மொழிவு மற்றும், அது தொடர்பான ஆலோசனை அறிக்கைகளை www.pucsl.gov.lk என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.

முன்மொழியப்பட்டுள்ள மின் கட்டண திருத்தம் தொடர்பாக பொதுமக்களின் எழுத்துப்பூர்வ கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும். இந்தக் கட்டணத் திருத்தம் தொடர்பான வாய்மூலக் கருத்துக்களை தெரிவிக்கும் அமர்வு 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி; கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும். இவ்வமர்வில் பங்கேற்பதற்காக பதிவு செய்ய 071 862 2800 ஐ அழைக்கவும்.

2002 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டத்தின் 17 வது பிரிவின் கீழ் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் இந்த பொது ஆலோசனை கேட்டல் நடத்தப்படுகிறது.

“உத்தேசிக்கப்பட்டுள்ள மின்சாரக் கட்டணம் 2024 –  பொது ஆலோசனை கேட்டல்”

இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

6 வது மாடி, இலங்கை வங்கி வர்த்தகக் கோபுரம்,

இல.28, புனித மைக்கல் வீதி, கொழும்பு 03.

தொலைநகல்: (011)2392641

இணையதளம் : www.pucsl.gov.lk

மின்னஞ்சல் : consultation@pucsl.gov.lk

முகநூல் : www.facebook.com/pucsl

 

மேலதிக தகவல்களுக்கும் தெளிவுபடுத்துவதற்கும் திரு. ஹசங்க கம்புருகமுவ அவர்களை (011) 2392607/8 தொடர்பு கொள்ளவும்.

தலைவர்

இலங்கைப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு

 

திகதி: 23.01.2024