உத்தேசிக்கப்பட்டுள்ள மின்சாரக் கட்டணம் 2023 – பொது ஆலோசனை கேட்டல்
உத்தேசிக்கப்பட்டுள்ள மின்சாரக் கட்டணம் 2023 – பொது ஆலோசனை கேட்டல்

(2002 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டத்தின் 17 வது பிரிவின் கீழான பொது அறிவிப்பு)

2009 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் 30 ஆவது பிரிவின் கீழ், உரிமதாரரால் (இலங்கை மின்சாரசபை) 2023 ஆம் ஆண்டிற்கான உத்தேசிக்கப்பட்ட மின்சாரக் கட்டணத்தைப் பற்றிய பொது ஆலோசனை கேட்டலை நடத்துவதற்கான முடிவை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இதன் மூலம் அறிவிக்கிறது.

விநியோக உரிமதாரரால் முன்மொழியப்பட்ட கட்டணத்தை அமுல்படுத்துவதன் மூலம் தனது வருமானம் 66.2% ஆக உயருமென முன்மொழியப்பட்டுள்ளது.

தொடர்பில் ஏற்பட்ட பாதிப்புகள் அல்லது ஏதேனும் சிக்கல்கள் அல்லது தகவல்கள் இருந்தால் எழுத்துமூல சமர்ப்பிப்புகளை சமர்ப்பிக்குமாறு பங்குதாரர்கள் மற்றும் பொது மக்கள் இத்தால் அழைக்கப்படுவதுடன் தேவை ஏற்படின் அத்தகவல்கள் குறித்து சம்பந்தப்பட்டவர்களை நேரில் வரவழைத்து வாய்மொழி அறிக்கைகளைப் பெறவும் ஆணைக்குழு பரிசீலிக்கும்.

2002 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் 17ஆம் பிரிவின்கீழ் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ் நடத்தப்படும் இந்த பொதுமக்கள் ஆலோசனை கேட்பு நிகழ்வுக்கான திகதி, நேரம் மற்றும் இடம் போன்ற விபரங்களை பத்திரிகை மூலமாகவும் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தின் வாயிலாகவும் (www.pucsl.gov.lk) உரிய நேரத்தில் இதே போன்ற அறிவித்தல் மூலம் பொதுமக்களுக்கு அறியத்தரப்படும்.

ஆலோசனை பத்திரத்தை www.pucsl.gov.lk இல் பார்வையிடலாம்.

இந்த அறிவிப்பின் திகதியிலிருந்து 21 நாட்களுக்குள் எழுதப்பட்ட சமர்ப்பிப்புகள் ஏதேனும் இருப்பின்:

சமர்ப்பிக்கும் முறை:

இணையதளம் : www.pucsl.gov.lk

மின்னஞ்சல் : consultation@pucsl.gov.lk

முகநூல் : www.facebook.com/pucsl

எழுத்துமூலம் : “உத்தேசிக்கப்பட்டுள்ள மின்சாரக் கட்டணம் 2023  பொது ஆலோசனை கேட்டல்”

இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

6 வது மாடி, இலங்கை வங்கி வர்த்தகக் கோபுரம், 

இல.28, புனித மைக்கல் வீதி, கொழும்பு 03.

தொலைநகல்: (011)2392641

மேலதிக தகவல்களுக்கும் தெளிவுபடுத்துவதற்கும் திரு. காஞ்சன சிறிவர்தன அவர்களை (011) 2392607/8 தொடர்பு கொள்ளவும்.

ஆணைக்குழுவின் உத்தரவுப்படி

 

ஜனக ரத்நாயக்க

தலைவர்

இலங்கைப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு

திகதி: 16.01.2023