
(2002 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டத்தின் 17 வது பிரிவின் கீழான பொது அறிவிப்பு)
2009ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் 30ஆவது பிரிவின் கீழ், உரிமதாரரால் (இலங்கை மின்சாரசபை) 2022ஆம் ஆண்டிற்கான உத்தேசிக்கப்பட்ட மின்சாரக் கட்டணத்தைப் பற்றிய வாய்மொழி மூல பொது ஆலோசனை கேட்டலை 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் 28ஆம் திகதி, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நடத்த தீர்மானித்துள்ளது.
2002ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டத்தின் 17வது பிரிவின் அமைய பொது ஆலோசனை கேட்டலை நடத்துவற்கான விதிமுறைகளுக்கு அமைவாக நடைபெறும். இந்த வாய்மொழி மூல பொது ஆலோசனை கேட்டலின் போது, உத்தேசிக்கப்பட்டுள்ள மின்சார கட்டண திருத்தம் தொடர்பான பாதிப்புகள் அல்லது சிக்கல்கள் அல்லது தகவல்கள் குறித்து வாய்மொழியாக சமர்பிக்குமாறு பங்குதாரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இதன் மூலம் அழைப்புவிடுக்கப்படுகிறது. சூம் (ZOOM) செயலி மூலம் வாய்வழி ஆலோசனையை அன்றைய தினம் (இணையம் மூலமாகவும்) சமர்ப்பிக்கமுடியும்.
2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் 28ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ள வாய்மொழி மூல ஆலோசனையை வழங்க கீழே உள்ள ஏதேனும் முறைகளைப் பயன்படுத்தி பதிவுசெய்யுமாறு பங்குதாரர்கள் மற்றும் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தொடர்புகளுக்கு: 071 862 2800
இணையமூலம் பதிவு செய்ய: [Click Here]
வாட்ஸ்எப் மூலம் பதிவு செய்ய: 076 427 1030
மின்னஞ்சல்: consultation@pucsl.gov.lk
தொலைநகல்: 011 239 2641
எழுத்த மூலம் : ‘உத்தேசிக்கப்பட்டுள்ள மின்சாரக் கட்டணம் 2022’ இலங்கைப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு, 6 வது மாடி, இலங்கை வங்கி வர்த்தகக் கோபுரம்
இல.28, புனித மைக்கல் வீதி, கொழும்பு 03.
தொலைபேசி : 011 239 2607/8
ஆலோசனை பத்திரத்தை www.pucsl.gov.lk/notices இல் பார்வையிடலாம்
ஆணைக்குழுவின் உத்தரவுப்படி
ஜனக ரத்நாயக்க
தலைவர்
திகதி: 21 ஜுலை 2022