உத்தேசிக்கப்பட்டுள்ள 2வது மின்சாரக் கட்டண திருத்தம் 2023 பொது ஆலோசனை கேட்டல்
உத்தேசிக்கப்பட்டுள்ள 2வது மின்சாரக் கட்டண திருத்தம் 2023 பொது ஆலோசனை கேட்டல்

(2002 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டத்தின் 17 வது பிரிவின் கீழான பொது அறிவிப்பு)

2009 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் 30 ஆவது பிரிவின் கீழ், உரிமதாரரால் (இலங்கை மின்சாரசபை) 2023 ஆம் ஆண்டிற்கான உத்தேசிக்கப்பட்ட மின்சாரக் கட்டணத்தைப் பற்றிய பொது ஆலோசனை கேட்டலை நடத்துவதற்கான முடிவை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இதன் மூலம் அறிவிக்கிறது.

இலங்கை மின்சார சபையால் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்ட மின்சாரக் கட்டணம் தொடர்பான ஆலோசனை பத்திரங்களை www.pucsl.gov.lk என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.

முன்மொழியப்பட்டுள்ள மின் கட்டண திருத்தம் தொடர்பாக பொதுமக்களின் எழுத்துப்பூர்வ கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் 2023 ஜூன் மாதம் 25 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும். இந்தக் கட்டணத் திருத்தம் தொடர்பான வாய்மூலக் கருத்துக்களை தெரிவிப்பதற்கான வாய்ப்பு 2023 ஜூன் மாதம் 26 ஆம் அன்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும்.

2023 ஜூன் மாதம் 25 ஆம் திகதி அன்று அல்லது அதற்கு முதல் பதிவு செய்ய 071 862 2800 ஐ அழைக்கவும்.

அங்கீகரிக்கப்பட்ட மின்சாரக் கட்டணங்கள் 2023 ஜூன மாதம் 30 ஆம் திகதி அன்று வெளியிடப்பட்டு 2023 ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்.

2002 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டத்தின் 17 வது     பிரிவின் கீழ் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் இந்த பொது ஆலோசனை கேட்டல் நடத்தப்படுகிறது.

முன்மொழியப்பட்ட கட்டணத் திருத்தம் தொடர்பான எழுத்துப்பூர்வ கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை        பின்வரும் முகவரிக்கு அல்லது கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய முறைகள் மூலம் சமர்ப்பிக்கலாம்.

தொலைநகல்: (011)2392641

மின்னஞ்சல் : consultation@pucsl.gov.lk

இணையதளம் : www.pucsl.gov.lk

முகநூல் : www.facebook.com/pucsl

“உத்தேசிக்கப்பட்டுள்ள 2வது மின்சாரக் கட்டண திருத்தம் 2023 பொது ஆலோசனை கேட்டல்”

இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

6 வது மாடி, இலங்கை வங்கி வர்த்தகக் கோபுரம்,

இல.28, புனித மைக்கல் வீதி,

கொழும்பு 03.

மேலதிக தகவல்களுக்கும் தெளிவுபடுத்துவதற்கும் திரு. காஞ்சன சிறிவர்தன அவர்களை (011) 2392607/8 தொடர்பு கொள்ளவும்.

09.06.2023