புதுப்பிக்கத்தக்க வலு உள்ளூட்டு காப்பு வரி மதிப்பாய்வு மீதான பங்குதாரர் கலந்தாலோசனை
புதுப்பிக்கத்தக்க வலு உள்ளூட்டு காப்பு வரி மதிப்பாய்வு மீதான பங்குதாரர் கலந்தாலோசனை

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது, புதுப்பிக்கத்தக்க வலு உள்ளூட்டு காப்பு வரி மதிப்பாய்வு மீதான பங்குதாரர் கலந்தாலோசனையானது, 2002 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுச் சட்டத்தின் 17(b) ஆம் பிரிவு மற்றும் (திருத்தப்பட்டபடி) 2024-ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார சட்டத்தின் 29 (3) ஆம் பிரிவு ஆகியவற்றின்படி நடத்தப்படும் என்பதைப் பங்குதாரர்களுக்கு இதன்மூலம் அறிவிக்கிறது.

திகதி மற்றும் நேரம்: 22 ஆம் திகதி ஜூலை 2026 (காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை)

இடம்: பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபம் (BMICH), கொழும்பு 7.

புதுப்பிக்கத்தக்க வலு உள்ளூட்டு காப்பு வரி மதிப்பாய்வு கலந்தாலோசனை பத்திரத்தை, ஆணைக்குழுவின் இணையதளத்தில் www.pucsl.gov.lk என்ற முகவரியில் கிடைக்கிறது.

முன்மொழியப்பட்ட புதுப்பிக்கத்தக்க வலு உள்ளூட்டு காப்பு வரி மதிப்பாய்வு கலந்தாலோசனை  தொடர்பான பங்குதாரர்களின் எழுத்துப்பூர்வமான கருத்துக்களும் ஆலோசனைகளும் 22 ஜூலை 2026 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

நிகழ்வில் பங்கேற்பதற்கோ அல்லது மேலதிக தகவல்களுக்கு, திரு. திரு. ஜயசூரியன் அவர்களை 077 039 39119 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.

தலைவர்

இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு,

6 வது மாடி, இலங்கை வங்கி வர்த்தகக் கோபுரம்,

இல.28, புனித மைக்கல் வீதி,

கொழும்பு 03

 

13.07.2026