உராய்வு நீக்கி எண்ணெயின் (குறைந்த பட்ச) இலங்கை தரத்திற்கான திருத்தங்கள்
உராய்வு நீக்கி எண்ணெயின் (குறைந்த பட்ச) இலங்கை தரத்திற்கான திருத்தங்கள்

வலுசக்தி அமைச்சு

இலங்கை பொதுபயன்பாடுகள் ஆணைக்குழு

 

பொதுமக்களுக்கன அறிவித்தல்

(11.07.2021 ஆம் திகதி பொதுமக்களுக்கான அறிவித்தலில் உள்ள விடயம் 2 இன் திருத்தங்கள்)

உராய்வு நீக்கி எண்ணெயின் (குறைந்த பட்ச) இலங்கை தரத்திற்கான திருத்தங்கள்

மோட்டார் வாகனங்களுக்கான  உராய்வு நீக்கி எண்ணெய்கள் குறைந்த பட்சம் பின்வருமாறு குறிப்பிடப்பட்ட இலங்கை தரத்தினை கொண்டமைந்ததாக இருத்தல் வேண்டுமென பொதுமக்களுக்கு இத்தால் அறிவிக்கப்படுகிறது. இவை என்ஜின் வகைகளின் தேவைக்கேற்ற வகையிலும் மற்றும் வாகனங்களினால் வெளியேற்றப்படும் புகையின் தன்மையின் அடிப்படையிலும்; இவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் இவை பின்வருமாறு குறிப்பிடப்பட்டவாறு அதிக செயற்திறன் வாய்ந்ததாக அமையும்.

1.திருத்ததப்பட்ட ஆகக் குறைந்த இலங்கை தரத்திற்கு இல்லாதிருப்பின், 2021 யூன் 30 ஆம் திகதியின் பின்னர் உராய்வு நீக்கி எண்ணெயை இறக்குமதி செய்தல், கலவை செய்தல் மற்றும் உற்பத்தி செய்தல் போன்றன தடைசெய்யப்படும்.

2. திருத்ததப்பட்ட ஆகக் குறைந்த இலங்கை தரத்திற்கு இல்லாதிருப்பின், 2021 டிசம்பர் 31 ஆம் திகதியின் பின்னர் உராய்வு நீக்கி எண்ணெயை விற்பனை செய்தல், வழங்கல் மற்றும் விநியோகித்தல் போன்றன தடைசெய்யப்படும்.

பின்ரும் அட்டவணையில் முன்னைய ஆகக் குறைந்த இலங்கைத் தரங்கள் (SLS), திருத்தப்பட்ட ஆகக் குறைந்த இலங்கைத் தரங்கள் (SLS) மற்றும் American Petroleum Institute (API) மற்றும் Japanese Automobile Standards Organization (JASO) தரங்கள் போன்றன தரப்பட்டுள்ன.

 

உற்பத்திகள் இலங்கைத் தரம் 2021.12.31 ஆம் திகதி வரை

(API/JASO க்கு சமனானது)

2022.01.01 ஆம் திகதியில் இருந்து

(API/JASO க்கு சமனானது)

பெற்றோல் என்ஜின் ஒயில் SLS 1374 API – SJ API – SL
டீசல் என்ஜின் ஒயில் SLS 1373 API – CF API – CH-4
இரண்டு ஸ்ரோக் என்ஜின் ஒயில் SLS 1446 JASO FC JASO FC

Use of a diluent, if any, is limited to High Flash Point Low Aromatic (HFLA) solvent

நான்கு ஸ்ரோக்  உந்துருளி என்ஜின் ஒயில் l உந்துருளி என்ஜின் ஒயில் SLS 1409 JASO MA

API – SG

JASO MA2

API – SL

ஸ்கூட்டர் என்ஜின் ஒயில் SLS 1409 JASO MA

API – SG

JASO MB

API – SL

கியர் ஒயில் SLS 1396 GL – 4 GL – 4

மோட்டார் வாகன உராய்வு நீக்கி எண்ணெயை இறக்குமதி செய்யும் இறக்குமதியாளர்கள், உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள், வழங்கலில் ஈடுபடும் வழங்குனர்கள், விநியோகத்தலில் ஈடுபடும் விநியோகத்தர்கள், விற்பனையில் ஈடுபடும் விற்பனையாளர்கள் மற்றும் அதனை பயன்படுத்தும் பயனாளிகள் போன்றோர் பொருத்தமான  இலங்கைத் தரங்களை (SLS) உறுதி செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலதிக தகவல்களை பெற விரும்பின் பின்வரும் அரச நிறுவனங்களை அல்லது அவர்களது வலைப்பின்னலை நீங்கள் தொடர்பு கொள்ளுதல் வேண்டும்.

வலுசக்தி அமைச்சு

இல. 80, சேர் ஏர்னஸ்ட் டி சில்வா மாவத்தை

கொழும்பு 07

தொலைபேசி  :  011 2564355

தொலை நகல் :  011 2372115

மின்னஞ்சல்   : info@energymin.gov.lk 

வலைப்பின்னல் : energymin.gov.lk

 

இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு

6 வது மாடி, BoC வர்த்தகக் கோபுரம்

இல.28, ச%