2023 ஆம் ஆண்டிற்கான விநியோகஸ்தர்கள், சேவை வழங்குநர்கள் மற்றும் ஒப்பந்தகாரர்களை பதிவு செய்தல்
2023 ஆம் ஆண்டிற்கான விநியோகஸ்தர்கள், சேவை வழங்குநர்கள் மற்றும் ஒப்பந்தகாரர்களை பதிவு செய்தல்

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவில் 2023 ஆம் ஆண்டிற்கான விநியோகஸ்தர்கள், சேவை வழங்குநர்கள் மற்றும் ஒப்பந்தகாரர்களை பதிவு செய்ய, பதிவு செய்யப்பட்ட விநியோகஸ்தர்கள், சேவை வழங்குநர்கள் மற்றும் ஒப்பந்தகாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பப் படிவங்கள், தேவையான பொருட்கள் மற்றும் சேவைகளின் பட்டியல் ஆகியவை எமது இணையதளமான www.pucsl.gov.lk இல் இலவசமாகக் பார்வையிடமுடியும். ஒரு தரப்பினர், பொருட்கள் மற்றும் சேவைகளின் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு பொருட்கள் அல்லது சேவைகளை பதிவு செய்யவும் தகுதியுடையவர். (தயவுசெய்து எமது இணையத்தளமான www.pucsl.gov.lk ஐ பார்வையிடவும்)

அனைத்து விண்ணப்பதாரர்களும் முறையாக பூர்த்தி செய்யப்பட்டு விண்ணப்பப் படிவத்துடன் பதிவுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். ஒவ்வொரு பொருளுக்கும் பதிவு செய்வதற்கு விண்ணப்பதாரரிடம் ரூ.500 (அனைத்தையும் உள்ளடக்கியது) வசூலிக்கப்படும்.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு – கணக்கு இலக்கம் 1630806 (கொள்ளுப்பிட்டி சுப்பர் கிரேட் கிளை) என்ற இலக்கத்திற்கு இலங்கை வங்கியின் கணக்கிற்கு பதிவுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

பதிவுசெய்யப்பட்ட விநியோகஸ்தர்களிடமிருந்து விலைமனு/ விலைகள் பொதுவாக அழைக்கப்பட்டாலும், தேவைக்கேற்ப ஏனைய விநியோகஸ்தர்களிடமிருந்து சேவைகளைக் கோருவதற்கான உரிமையை ஆணைக்குழு கொண்டுள்ளது.

விண்ணப்பங்கள் ஜனவரி 17 முதல் பிப்ரவரி 8, 2023 வரை அலுவலக வேலை நாட்களில் காலை 9.00 மணி முதல் மாலை 3.30 மணி வரை வழங்கப்படும். பின்வரும் முகவரி அல்லது இணையதளத்தில் ((www.pucsl.gov.lk/tamil/category/notices/)) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் தகவலுக்கு, உதவி பணிப்பாளர்- தகவல் முகாமைத்துவம்- 0714393018 அல்லது பிரதி பணிப்பாளர் (நிதி) 0112392607 (நீட்டிப்பு 716) ஐ தொடர்பு கொள்ளவும்.

2023 பெப்ரவரி 15 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கொள்முதல் குழு, 06-வது மாடி, இலங்கை வங்கி வர்த்தக கோபுரம், இல: 28 சென். மைக்கல் வீதி, கொழும்பு 03 என்ற முகவரிக்கு பதிவு செய்யப்பட்ட தபால் மூலம் இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி முறையாக பூர்த்தி செய்யப்பட்டு, வங்கி வைப்புச் சீட்டுகளுடன் விண்ணப்பங்கள் அனுப்பப்படல் வேண்டும். அனைத்து விண்ணப்பங்களும் கடித உறையின் இடதுபக்க மேல்மூலையில் ‘விநியோகங்கள்/சேவைகள் பதிவு 2023’ என்று எழுதப்பட்டிருக்க வேண்டும்.

விண்ணப்பத்தை தரவிறக்கவும் (க்ளிக் செய்யவும்) 

தலைவர்
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு
06-வது மாடி, இலங்கை வங்கி வர்த்தகக் கோபுரம்,
இலக்கம் 28, புனித மைக்கல் வீதி,
கொழும்பு 03

 

தொலைபேசி: (011) 2392607/8
தொலைநகல்: (011) 2392641
மின்னஞ்சல் :info@pucsl.gov.lk
இணையதளம்: www.pucsl.gov.lk