2020 ஓகஸ்ட் 17ஆம் திகதி பரிமாற்ற உரிமதாரர் (இலங்கை மின்சார சபை) வலையமைப்பில் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற மின்சார செயலிழப்பு தொடர்பான பகிரங்க விசாரிப்பு 
2020 ஓகஸ்ட் 17ஆம் திகதி பரிமாற்ற உரிமதாரர் (இலங்கை மின்சார சபை) வலையமைப்பில் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற மின்சார செயலிழப்பு தொடர்பான பகிரங்க விசாரிப்பு 

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

(2002ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் சட்ட பிரிவு 18 க்கு கீழ் வெளியிடும் பொது அறிவித்தல்)

2020 ஓகஸ்ட் 17ஆம் திகதி பரிமாற்ற உரிமதாரர் (இலங்கை மின்சார சபை) வலையமைப்பில் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற மின்சார செயலிழப்பு தொடர்பான பகிரங்க விசாரிப்பு 

 

பரிமாற்ற உரிமதாரர் வலையமைப்பில் (இலங்கை மின்சார சபை) நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற மின்சார செயலிழப்பு தொடர்பில் 2020 ஓகஸ்ட் 17ஆம் திகதி பகிரங்க விசாரிப்பு கேட்கும் கூட்டமொன்றை நடத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்தது.

மின்சார செயலிழப்பின் விளைவாக மொத்த மின்சக்தி தேவையான 27.5 ஜிகாவொட் மின்சக்தியை வழங்குவதில் பரிமாற்ற உரிமதாரரின் இயலாமை வெளிப்பட்டுள்ளது. இதனை மின்சக்தி கட்டமைப்புக்குள் வழங்க இயலாமை, பொருளாதாரத்திற்கு நான்கு பில்லியன் ரூபாய் (4 பில்லியன்) மதிப்பிடப்பட்ட செலவுக்கு சமமானதாகும், பின்னர் தோல்வி காரணமாக கூடுதல் விளைவு இழப்புகளும் அடங்கும். சமூக பொருளாதார தாக்கங்களை மட்டுப்படுத்தல் மற்றும் இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் மீண்டும் இடம்பெறுவதை தவிர்ப்பது குறித்த பொருத்தமான பரிந்துரைகளை பெறும் வகையில் பொதுமக்கள் கருத்து கேட்டல் உறுதிபாட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் கருத்து கேட்டல் கூட்டத்தை, 2002ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்ட பிரிவு 18 இன் பரிந்துரைக்கமையவும், பொது விசாரணை ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறையின்படியும் நடத்த ஆணைக்குழுவினால் உத்தேசிக்கப்பட்டது.

மின்சார செயலிழப்புடன் தொடர்புடைய பாதிப்புகள் அல்லது ஏதேனும் பிரச்சினைகள் அல்லது தகவல்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை எழுத்து மூலம் சமர்ப்பிக்குமாறு பங்குதாரர்கள் மற்றும் பொதுமக்களிடம் இதன்மூலம் அழைப்பு விடுக்கப்படுகிறது. இத்தகைய சமர்ப்பிப்புகளை ஆணைக்குழு பரிசீலிக்கும் அல்லது வாய்மூலம் கருத்துக்களை வெளிப்படுத்த அத்தகைய தரப்பினர் ஆணைக்குழுவினால் வரவழைக்கப்படுவர்.

2002ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் சட்ட பிரிவு 18 இன் கீழ் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ் பொதுமக்கள் கருத்து கேட்கும் கூட்டம் நடத்தப்படுவதுடன், இப் பகிரங்க கருத்து கேட்டலானது 2021 மே மாதம் 7 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு பௌத்தாலோக்க மாவத்தை, கொழும்பு-07 இல் அமைந்துள்ள பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும். இவ்வறிவித்தல் வெளியிடப்பட்டு 28 நாட்களுக்குள் எழுத்து மூலமான சமர்ப்பிப்புகள் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

தலைவர்

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

6ஆம் மாடி, இலங்கை வங்கி வர்த்தக கோபுரம்

28, புனித மைக்கல்ஸ் வீதி,

கொழும்பு 03

 

தொலைநகல்: 011 2392641

மின்னஞ்சல் : consultation@pucsl.gov.lk

 

மேலதிக விபரங்கள் மற்றும் தெளிவுபடுத்தல்களுக்கு

0776618031 அல்லது 0112392606-8 என்ற இலக்கங்கள் ஊடாக ஜானகி விதானகம அவர்களை தொடர்பு கொள்ளவும்.

ஆணைக்குழுவின் கட்டளைக்கமைய

ஜனக ரத்நாயக்க

தலைவர்

திகதி: 28 மார்ச் 2021