
(2002ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் சட்ட பிரிவு 18 க்கு கீழ் வெளியிடும் பொது அறிவித்தல்)
2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 09 ஆம் திகதி அன்று தீவு முழுவதும் ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பாக பகிரங்க விசாரணையை நடத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளமையை இதன் மூலம் அறிவிக்கிறது.
மேற்குறிப்பிட்ட மின்சார செயலிழப்பின் காரணமாக விளைவுகளுக்குள், கட்டமைப்பு செயலிழப்பு காரணமாக விநியோக உரிமதாரர் 5.5 GWh மின்சார ஆற்றல் தேவையை வழங்க இயலாமையும், அதன் பின்னர் ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக 4.6 GWh மின்சார ஆற்றல் தேவையை வழங்க இயலாமை மற்றும் விநியோக உரிமதாரருக்கு ஏற்பட்ட இழப்புக்கள் ஆகியவை உள்ளடங்கும் அதே நேரம் அதன் காரணமாக பொதுமக்களுக்கு, பொருளாதாரம் மற்றும் நுகர்வோருக்கு ஏற்படும் ஆபத்துகள், இழப்புகள் மற்றும் பாதிப்புகள் என்பனவும் உள்ளடங்கும்.
இந்த விசாரணையின் தீர்மானத்திற்கு, இந்த மின்வெட்டின் சமூக-பொருளாதார தாக்கங்கள் பற்றிய விசாரணை மற்றும் எதிர்காலத்தில் இத்தகைய மின்வெட்டுக்களை தடுக்க பொருத்தமான பரிந்துரைகளை அடையாளம் காண்பது ஆகியவற்றை உள்ளடக்கும், ஆனால் அவை மட்டும் அல்ல.
மேற்கூறிய மின்வெட்டு தொடர்பான ஏதேனும் தகவல்கள், இழப்பீடுகள், அல்லது பாதிப்புகளை எழுத்துமூலமாக சமர்ப்பிக்க சம்பந்தப்பட்ட தரப்பினரும் பொதுமக்களும் இதன் மூலம் அழைக்கப்படுகிறார்கள். எழுத்துப்பூர்வ சமர்ப்பிப்புகளை ஆணைக்குழு பரிசீலிக்கும், தேவை ஏற்படின், சாட்சியமளிக்க தரப்பினரை அழைக்கும்.
2002 ஆம் ஆண்டு 35 ஆம் இலக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டத்தின் பிரிவு 18 இன் கீழ் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி இந்தப் பகிரங்க விசாரணை நடத்தப்படுகிறது, மேலும் இந்தப் பொது விசாரணைக்கான திகதி, நேரம் மற்றும் இடம் ஆகியவை உரிய நேரத்தில் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும்.
எழுத்துமூல சமர்ப்பிப்புகளை 19 ஆம் திகதி ஜூன் மாதம் 2025 அன்றைய தினத்திற்கு முன்பாக பின்வரும் முறைகளில் சமர்ப்பிக்க வேண்டும்:
”2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 09 ஆம் திகதி அன்று தீவு முழுவதும் ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பாக பகிரங்க விசாரணை”
தலைவர்
இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு
6வது மாடி, இலங்கை வங்கி வர்த்தகக் கோபுரம்
28, சென். மைக்கேல்ஸ் வீதி,
கொழும்பு 03
பெக்ஸ்: 011 2292641
மின்னஞ்சல்: consultation@pucsl.gov.lk
இணைய தளம்: www.pucsl.gov.lk
தலைவர்
இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு
22.05.2025