
(2002ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் சட்ட பிரிவு 18 க்கு கீழ் வெளியிடும் பொது அறிவித்தல்)
மேற்குறிப்பிட்ட பகிரங்க விசாரணை தொடர்பாக 2025 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி வெளியிடப்பட்ட பொது அறிவிப்பின் தொடர்ச்சியாக இவ்வறிவித்தல் வெளியிடப்படுகிறது.
2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 09 ஆம் திகதி ஏற்பட்ட தீவு முழுவதும் ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பான பகிரங்க விசாரணையை கீழே குறிப்பிட்ட திகதி மற்றும் இடத்தில் நடத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது என்பதை இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.
திகதி: 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி (காலை 8.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை)
இடம்: பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம் (BMICH), பௌத்தலோக மாவத்தை, கொழும்பு 07
தலைவர்
இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு
21-07-2025
Report Submitted to the Commission in terms of paragraph 22 of the Public Hearing Procedures.