வருடாந்த நடவடிக்கைத்திட்டம் 2024 மீதான மக்கள் ஆலோசனையளிப்பு
வருடாந்த நடவடிக்கைத்திட்டம் 2024 மீதான மக்கள் ஆலோசனையளிப்பு

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஆனது, 2002 ஆம் ஆண்டு 35 ஆம் இலக்கச் சட்டத்தின் படி மின்சாரம், நீர்ச் சேவைகள் மற்றும் பெற்றோலியம் ஆகிய தொழிற்றுறைகளின் ஒழுங்குறுத்துநராக 2002ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டு 20 ஆம் இலக்க மின்சாரச் சட்டம் ஆக்கப்பட்ட பின்னர் ஆணைக்குழு ஆனது, மின்சாரத் துறையின் பொருளாதார, பாதுகாப்பு மற்றும் தொழினுட்ப ஒழுங்குறுத்துநராக தொழிற்பட ஆரம்பித்தது. பெற்றோலியம் மற்றும் நீர்ச்சேவைகள் ஆகிய தொழிற்றுறைகளின் சட்ட உருவாக்கத்தின்பின்னராக அவற்றின் ஒழுங்குறுத்துகை அதிகாரங்கள் பெறப்பட்ட பின்னர், ஆணைக்குழுவானது குறித்த தொழிற்றுறைகளின் ஒழுங்குறுத்துநராக பணியாற்ற ஆரம்பிக்கும். ஆணைக்குழுவானது தற்போது உராய்வு நீக்கிச் சந்தையின் நிழல் ஒழுங்குறுத்துநராக செயலாற்றுவதால், உராய்வு நீக்கிச் சந்தை தொடர்பான ஒழுங்குருத்துகை மற்றும் கொள்கை விவகாரங்களில் தேவையான ஆலோசனைகளை பெற்றோலியத் துறைக்கான அமைச்சிற்கு வழங்குகின்றது. 

 

2002 ஆம் ஆண்டு 35 ஆம் இலக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுச் சட்டம் மற்றும் 2009 ஆம் ஆண்டு 20 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டம் ஆகியவற்றால் குறிப்பிடப்பட்ட, நோக்கங்களை அடைவதற்காக, ஆணைக்குழுவானது 04 நீண்ட கால இலக்குகளை அடையாளம் கண்டுகொண்டுள்ளது. இந்த நோக்கங்களை அடைவதற்காக, ஆணைக்குழுவானது ஆண்டு தோறும் செயற்படுத்தப்படவேண்டிய புத்தாக்க நடவடிக்கைகளின் தொடர்களை திட்டமிடுகிறது. வருடாந்த நடவடிக்கைத் திட்டம் 2024 ஆனது வரையப்பட்டு உள்ளது. குறித்த நடவடிக்கைகள் மீதான பொது மக்கள் உள்ளிட்ட பங்காளர்களின் எழுத்துமூல கருத்துகளைக் கோருவதற்கு ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

 

வரைபுத் திட்டம் ஆனது தற்போது ஆணைக்குழுவின் இணையத்தளமான www.pucsl.gov.lk இல் பார்வைக்காக வைக்கப்பட்டு உள்ளது. ஆணைக்குழுவின் தகவல் மையத்தில் இதன் அச்சிட்ட பிரதி தயாராக உள்ளது. ஆர்வமுடைய தரப்பினர் 2023.09.21 அன்றோ அதற்கு முன்போ, இது தொடர்பான தமது எழுத்துமூல சமர்ப்பிப்புகளை செய்யுமாறு கோரப்படுகின்றனர்.

 

சமர்ப்பிப்புக்கும்முறை:

www.pucsl.gov.lk இன் ஊடாக இணையதளம் மூலம்

அல்லது

consultation@pucsl.gov.lk எனும் மின்னஞ்சலுக்கு மூலம்

அல்லது

www.facebook.com/pucsl மூலம்;

அல்லது

பின்வரும் முகவரிக்கு எழுத்துமூலம் அனுப்பலாம்:

‘வருடாந்த நடவடிக்கைத்திட்டம் 2023 மீதான மக்கள் ஆலோசனையளிப்பு’

இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

6 – வது மாடி,

இலங்கை வங்கி வர்த்தகக் கோபுரம்,

இல.28, புனித மைக்கல் வீதி, கொழும்பு 03.

தொலைபேசி: (011)2392607/8, தொலைநகல்: (011) 2392641

 

திகதி: 01.09.2023