நடவடிக்கைத் திட்டம் 2020 மீதான ஆலோசனை கோரல்
நடவடிக்கைத் திட்டம் 2020 மீதான ஆலோசனை கோரல்

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

நடவடிக்கைத் திட்டம் 2020 மீதான ஆலோசனை கோரல்

இங்கு தரவிறக்கவும்

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஆனது, 2002 ம் ஆண்டு 35 ம் இலக்கச் சட்டத்தின் படி மின்சாரம், நீர்ச் சேவைகள் மற்றும் பெற்றோலியம் ஆகிய தொழிற்றுறைகளின் ஒழுங்குறுத்துநராக 2002ம் ஆண்டு அமைக்கப்பட்டது. 2009 ம் ஆண்டு 20 ம் இலக்க மின்சாரச் சட்டம் ஆக்கப்பட்ட பின்னர் ஆணைக்குழு ஆனது, மின்சாரத் துறையின் பொருளாதார, பாதுகாப்பு மற்றும் தொழினுட்ப ஒழுங்குறுத்துநராக தொழிற்பட ஆரம்பித்தது. பெற்றோலியம் மற்றும் நீர்ச் சேவைகள் ஆகிய தொழிற்றுறைகளின் சட்டங்கள் ஆக்கப்பட்ட பின் அவற்றின் ஒழுங்குறுத்துகை அதிகாரங்கள் பெறப்பட்ட பின்னர், ஆணைக்குழு ஆனது அவ்வவ் தொழிற்றுறைகளின் ஒழுங்குறுத்துநராக பணியாற்ற ஆரம்பிக்கும். ஆணைக்குழு ஆனது தற்போது உராய்வு நீக்கிகள் சந்தையின் மறைமுக ஒழுங்குறுத்துநராக செயலாற்றுவதால், உராய்வு நீக்கிச் சந்தை தொடர்பான ஒழுங்குருத்துகை மற்றும் கொள்கை விவகாரங்களில் தேவையான ஆலோசனைகளை பெற்றோலியத் துறைக்கான அமைச்சிற்கு வழங்குகின்றது.

2002 ம் ஆண்டு 35 ம் இலக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுச் சட்டம் மற்றும் 2009 ம் ஆண்டு 20 ம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டம் ஆகியவற்றால் குறிப்பிடப்பட்ட, நோக்கங்களை அடைவதற்காக, ஆணைக்குழு ஆனது 4 நீண்ட கால இலக்குகளை அடையாளம் கண்டு கொண்டுள்ளது. இந்த நோக்கங்களை அடைவதற்காக, ஆணைக்குழுவானது ஆண்டு தோறும் செயற்படுத்தப்பட வேண்டிய புத்தாக்க நடவடிக்கைகளின் தொடர்களை திட்டமிடுகிறது. வருடாந்த நடவடிக்கைத் திட்டம் 2020 ஆனது வரையப்பட்டு உள்ளதோடு அதன்படி www.pucsl.gov.lk என்ற இணையதளத்தில் இதனை காணலாம். 2020ல் உத்தேசிக்கப்பட்ட நடவடிக்கைகள் மீதான பொதுமக்கள் உள்ளிட்ட பங்காளர்களின் எழுத்துமூல கருத்துகளைக் கோருவதற்கு ஆணைக்குழு தீர்மானித்து உள்ளது.

ஆர்வமுடைய தரப்பினர் 2019 செப்டெம்பர் 15 ஆம் திகதி அன்றோ அல்லது அதற்கு முன்போ, இது தொடர்பான தம் எழுத்து மூல சமர்ப்பிப்புகளை சமர்ப்பிக்குமாறு கோரப்படுகின்றனர்.

www.pucsl.gov.lk இன் ஊடாக இணைய வழியில் கருத்து அளிக்கலாம்;
அல்லது
consultation@pucsl.gov.lk எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்;
அல்லது
www.facebook.com/pucsl எனும் பேஸ்புக் கணக்கு மூலமாக அனுப்பலாம்;
அல்லது
பின்வரும் முகவரிக்கு எழுத்துமூலம் அனுப்பலாம்:
நடவடிக்கைத் திட்டம் 2020 மீதான ஆலோசனை கோரல்
இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு
6 – வது மாடி, இலங்கை வங்கி வர்த்தகக் கோபுரம், 28, புனித மைக்கல் வீதி, கொழும்பு 03.

தொலைபேசி: (011)2392607/8 பெக்ஸ்: (011) 2392641

திகதி: 2019 ஆகஸ்ட் 29