நுகர்வோர் ஆலோசனைக் குழு உறுப்பினர் (சப்ரகமுவ, மத்திய மற்றும் வட மேல் மாகாணங்கள்)
நுகர்வோர் ஆலோசனைக் குழு உறுப்பினர் (சப்ரகமுவ, மத்திய மற்றும் வட மேல் மாகாணங்கள்)

நுகர்வோர் ஆலோசனைக் குழு உறுப்பினர்

(சப்ரகமுவ, மத்திய மற்றும் வட மேல் மாகாணங்கள்)

இலங்கைப் பொதுப பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சாரத் ஒழுங்குறுத்துகை நிறுவனமாக திகழ்கிறது. மின்சாரத்துறையில் ஒழுங்குறுத்துகை மேற்கொள்ளும் அதேநேரம் மின்சார துறையின் பொருளாதாரம், பாதுகாப்பு முகாமைத்துவ ஒழுங்குறுத்துகையை மேற்கொண்டும் வருகின்றது. இதில் பாவனையாளர் பாதுகாப்பு பிரிவில்நுகர்வோர் ஆலோசனைக் குழுவின் (நு.ஆ.கு) ஊவா மாகாண உறுப்பினருக்கான பதவி வெற்றிடத்திற்காக தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் வட மேல் மாகாணத்தில் வதியும் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பில் ஆர்வமுடை அத்துடன் நு.ஆ.கு உறுப்பினராக நியமனம் பெற விரும்பும் சப்ரகமுவ, மத்திய மற்றும் வட மேல் மாகாண விண்ணப்பத்தார்களிடமிருந்து கோரப்படுகின்றன.

விண்ணப்பதாரர்கள் பின்வரும் பண்புகளை கொண்டிருத்தல் வேண்டும்:

  • இவ் அறிவித்தல் திகதி அன்று 65 வயதிற்கும் குறைவானவர்.
  • சமூக/சமூதாய சேவைகளில் (நுகர்வோர் நலன்களில் விரும்பத்தக்கது) நிரூபிக்கத்தக்க ஈடுபாடுகளை உடையவர்.
  • சிங்களம் அல்லது தமிழ் மொழிகளுக்கு மேலதிகமாக ஆங்கில மொழியில் பணியாற்றக்கூடிய அறிவு.

அனைத்து விண்ணப்ப படிவங்களும் கீழ்வருவனவற்றை உள்ளடக்குதல் வேண்டும்:

  • ‘’இலங்கையில் நுகர்வோர் பாதுகாப்பு” என்ற தலைப்பில் ஒரு சுருக்கக் கட்டுரை (500 சொற்களுக்கு மேற்படாதது).
  • கிராம உத்தியோகத்தரினால் வழங்கப்பட்ட வதிவிடச் சான்றிதல்.
  • குறித்த பிரதேச சமூக தலைவர் ஒருவர் வழங்கிய நற்சான்றிதழ் பத்திரம்:

விண்ணப்பிக்கும் பதவி கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் அல்லது மின்னஞ்சலில் விடயப்பரப்பில் (ளுரடிதநஉவ) குறிப்பிடப்பட வேண்டும்.

தகவல்கள் பூரணப்படுத்திய சுயவிபரக் கோவையை  2020.08.21 திகதிக்கு முன்னர் சமர்ப்பித்தல் வேண்டும்.

தலைவர்
இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

06-வது மாடி, இலங்கை வங்கி வர்த்தகக் கோபுரம்,

இலக்கம் 28, புனித மைக்கல் வீதி,
கொழும்பு 03
 
தொலைபேசி: (011) 2392607/8  தொலைநகல்: (011) 2392641
மின்னஞ்சல்:careers@pucsl.gov.lk இணையதளம்: www.pucsl.gov.lk 

2020.08.07