2024 ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் 21(2) மற்றும் (3) பிரிவுகளின் கீழ் விடுக்கப்படும் அறிவித்தல்
2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் 21(2) மற்றும் (3) பிரிவிற்கமைய, இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு (ஆணைக்குழு) நுகர்வோர்களுக்கு தொடர்ச்சியாக மின்சார விநியோகத்தைக் கிடைக்கச் செய்வதை உறுதிசெய்யும் பொருட்டு குறிப்பிட்ட நபர்களுக்கு மின்சாரத்தினை பிறப்பாக்கம் செய்யும் நோக்கத்திற்கான அனுமதிப் பத்திரத்தினை மேம்படுத்த உத்தேசிக்கின்றது என்பதை இத்தால் அறியத்தருகின்றது.
| விண்ணப்ப இலக்கம் | விண்ணப்பதாரரின் பெயர் | மின்நிலையத்தின்/வசதியின் பெயர் | அமைவிடம் | திறன் (MW) | தொழில்நுட்பம் |
| E/AL/N/26/27 | திய ஜனனி (பிரைவேட்) லிமிடெட் | தம்புலுஓயா நீர்த்தேக்கம் மிதக்கும் சூரிய மின்னுற்பத்தி நிலையத் திட்டம் | ஆனகடாவ, தம்புள்ளை | 5 | மிதக்கும் சூரியப்படலம் |
| E/AL/N/26/28 | மீரிகம சோலார் (பிரைவேட்) லிமிடெட் | மீரிகம சூரிய சக்தி திட்டம் | ரெனகல வத்த, மீரிகம | 3 | சோலார் பிவி |
| E/AL/N/26/29 | சிதாரா லிமிடெட்
|
நிலத்தில் பொருத்தும் சோலார் பிவி திட்டம் | மல்பொகுனவத்த தோட்டம், உடுபத்தாவ, குளியாபிட்டிய | 1 | சோலார் பிவி |
| E/AL/N/26/30 | அல்பெக்ஸ் கிரீன் எனர்ஜி (பிரைவேட்) லிமிடெட்
|
குபுடுகுலிய 5000 (5.0 MW) சோலார் பிவி திட்டம்
குபுடுகுளிய வத்த |
பங்கதெனிய, ஆராச்சிக்கட்டுவ, புத்தளம் | 5 | சோலார் பிவி |
| E/AL/N/26/31 | லோட்டஸ் ஹைட்ரோ பவர் பிஎல்சி | டெல்டா சிறு நீர்மின் நிலையம் | டெல்டா தோட்டம், புபுரச, கம்பளை | 1.6 | மினி ஹைட்ரோ |
மேற்குறிப்பிட்ட முன்மொழிவுகள் தொடர்பான, ஆட்சேபனைகள் (ஏதுமிருப்பின்) அறிவித்தல் வெளியிடப்பட்டு இருபத்து எட்டு (28) நாட்களுக்குள் ஆணைக்குழுவிற்கு எழுத்து மூலமாக அறிவிக்கலாம். அத்துடன் ஆட்சேபனைகளை முன்வைக்கும்போது விண்ணப்பக் குறிப்பு இலக்கத்தினைக் குறிப்பிட்டு முன்வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
தலைவர்
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு
06-வது மாடி, இலங்கை வங்கி வர்த்தகக் கோபுரம்,
இலக்கம் 28, புனித மைக்கல் வீதி,
கொழும்பு 03
தொலைபேசி: (011) 2392606/7
பெக்ஸ்: (011) 2392641
மின்னஞ்சல்: licensing@pucsl.gov.lk இணையதளம்: www.pucsl.gov.lk