விலக்களித்தலுக்கான உத்தேசம் (வகை விலக்கு)
விலக்களித்தலுக்கான உத்தேசம் (வகை விலக்கு)

2009ம் ஆண்டு 20ம் இலக்க இலங்கை மின்சாரச்
சட்டத்தின் 21 (2) பிரிவின் கீழ் விடுக்கப்படும் அறிவித்தல்.

விலக்களித்தலுக்கான உத்தேசம் (வகை விலக்கு)

2009ம் ஆண்டு 20ம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் 21 (2) பிரிவிற்கமைய இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது இத்தால் அறியச் செய்வது யாதெனில், குறித்துரைக்கப்பட்டஃ முறையான வளாகங்களில் மட்டும் மின்சாரத்தை விநியோகித்தல் மற்றும் வழங்கல் ஆகிய நோக்கங்களிற்காக, நுகர்வோருக்கு மின்சாரம் கிடைப்பதையும் தொடர்ச்சியையும் உறுதி செய்வதற்காக மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நோக்கத்திற்காக, நாடு முழுவதும் புவியியல் ரீதியாக விநியோகிக்கப்படும் அதிக எண்ணிக்கையிலான மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் சிறிய அளவிலான மின் உற்பத்தியின் தன்மையைக் கருத்தில் கொண்டு.ஆணைக்குழு கீழ்வரும் அடையாளங்காணப்பட்ட வகைகளுக்கு விலக்களிக்க உத்தேசித்து (மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான உரிமம் பெறுவதற்கான தேவையிலிருந்து விலக்கு) உள்ளது என்பதாகும்.

 

குறைந்த மின்னழுத்தம், 75மறு, சூரியசக்தியில் இயங்கும் சூரிPV அமைப்புகளுக்கான வெற்றிகரமான திட்ட முன்மொழிவுகள் இலங்கை மின்சாரசபையினால் தனியுரிமை அடிப்படையில் கூரையில் நிறுவப்பட்டுள்ளன. மேற்கூறிய கொள்முதலின்கீழ் வெற்றிகரமான திட்டமுன்மொழிவுகளின் பட்டியல் பின்வரும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

www.pucsl.gov.lk/news-room/notices/

மேற்குறிப்பிட்ட முன்மொழிவுகள் தொடர்பான, ஆட்சேபனைகள் (ஏதுமிருப்பின்) அறிவித்தல் வெளியிடப்பட்டு இருபத்து எட்டு (28) நாட்களுக்குள் ஆணைக்குழுவிற்கு எழுத்து மூலமாக அறிவிக்கலாம். அத்துடன் ஆட்சேபனைகளை முன்வைக்கும் போது விண்ணப்ப இலக்கத்தினைக் குறிப்பிட்டு முன்வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

தலைவர்
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு
06-வது மாடி, இலங்கை வங்கி வர்த்தகக் கோபுரம்,
இலக்கம் 28, புனித மைக்கல் வீதி,
கொழும்பு 03

தொலைபேசி: (011) 2392607/8
தொலைநகல்: (011) 2392641

மின்னஞ்சல்:licensing@pucsl.gov.lk
இணையதளம்: www.pucsl.gov.lk

திகதி: 2022.06.01