பொது அறிவித்தல்
பொது அறிவித்தல்

இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட 2009 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் விதிகளுக்கு இணங்க மின்சார கட்டமைப்புக்களை (வயரிங்) நிறுவுதல் பராமரித்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றிற்காக அங்கீகரிக்கப்பட்ட மின்சார வல்லுநர்களின் சேவைகள் பெறப்பட வேண்டும். மின்சார கைவினைத்திறனின் தரத்தைப் பாதுகாக்கவும், பயன்பாட்டின்போது பாதுகாப்பை உறுதிப்படுத்தவும். இதன்படி, இலவச தேசிய தொழிற்கல்வித் தகைமை மட்டம் 3 மற்றும் மின்னியலாளர்களுக்கான தொழில்சார் அடையாள அட்டை வழங்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இந்த வேலைத்திட்டத்துடன், இலங்கை பொறியியல் சபை சட்டத்தின் கீழ் தகுதியான மின்னியலாளர்களுக்கு ‘பொறியியல் தொழில்நுட்பவியலாளர்’ என்ற பட்டத்தை வழங்கும் திட்டத்தையும் இலங்கை பொறியியல் சபை அறிமுகப்படுத்தியுள்ளது.

 

மின்னியலாளர்களாக பணிபுரியும் போது பின்வரும் திகதிகளுக்குள் உரிய குறைந்தபட்ச தகுதிகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்று இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

 

2026 ஜனவரி 01 ஆம் திகதி முதல் ஏற்படும் மாற்றங்கள்:

 

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் 2029 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையிலான காலகட்டத்தில், மின்னியலாளராக தொடர்புடைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தேசிய தொழிற்கல்வித் தகைமை மட்டம் 3 (NVQ  மட்டம் 3) இன் குறைந்தபட்சத் தகைமையைப் பெற்றிருப்பது கட்டாயமாகும்.

 

2030 ஜனவரி 01 ஆம் திகதி முதல் நடைமுறையாகும் மாற்றங்கள்

 

2030 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம் திகதிக்கு பின்னர், தேசிய தொழிற்கல்வித் தகைமை மட்டம் 4 (NVQ  மட்டம் 4) தகைமை மற்றும் இலங்கை பொறியியல் சபையில் பதிவு செய்தல் என்பன மின்னியலாளராக தொடர்புடைய நடவடிக்கைகளில் ஈடுபட கட்டாயமாகும்.

 

இதன்படி, மேற்கூறிய திகதிகளுக்குள் குறைந்தபட்ச தகைமைகளை பூர்த்தி செய்யாத எந்தவொரு மின்னியலாளர்களும், இலங்கை மின்சார சட்டம் மற்றும் இலங்கை பொறியியல் சபையினால் நிறுவப்பட்ட சட்ட கட்டமைப்பிற்குள் மின்னியலாளர்களாக பணியாற்ற தகுதியற்றவர்களாக இருப்பார்கள்.

 

இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு, 2021 ஆம் ஆண்டு முதல் 18 மாதங்களுக்குக் குறையாத அனுபவமுள்ள மின்னியலாளர்களுக்கு தேசிய தொழிற்க்கல்வித் தகைமை நிலை 3 (NVQ 3) ஐ இலவசமாக வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. இலவச NVQ 3  சான்றிதழைப் பெற பதிவு செய்ய, 076 4 27 10 30 ஐ அழைத்து உங்கள் பெயர் மற்றும் மாவட்டத்தை குறிப்பிட்டு வட்ஸ்அப் ஊடாக அனுப்பவும். அல்லது அந்த எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம்.

 

பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ

தலைவர்