மின்சார நுகர்வோர் முறைப்பாடுகளை தீர்ப்பதற்காக மேற்கொள்ளும் செயல்முறையில் ஆய்வு
மின்சார நுகர்வோர் முறைப்பாடுகளை தீர்ப்பதற்காக மேற்கொள்ளும் செயல்முறையில் ஆய்வு

முன்மொழிவுகளுக்கான கோரிக்கை

மின்சார நுகர்வோர் முறைப்பாடுகளை தீர்ப்பதற்காக மேற்கொள்ளும் செயல்முறையில் ஆய்வு

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார நுகர்வோர் முறைப்பாடுகளை தீர்ப்பதற்காக மேற்கொள்ளும் செயல்முறையில் ஆய்வு நடத்துவதற்கு தகுதியான ஆலோசகர்களிடமிருந்து முன்மொழிவுகளை அழைக்கிறது.

  • பணியின் நோக்கம், முன்மொழிவுக்கான கோரிக்கை (RFP) மற்றும் கொள்முதல் பற்றிய விரிவான தகவல்களை எமது உத்தியோகபூர்வ இணையதளமான www.pucsl.gov.lk இலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
  • கொள்முதல் குழுவின் தலைவருக்கு அனுப்பப்பட்ட முன் மொழிவுகளுக்கான கோரிக்கையின் (RFP) படி முறையாக தயாரிக்கப்பட்ட முத்திரையிடப்பட்ட மனுக்கள்இ 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 03ஆம் திகதி அல்லது அதற்கு முன் மாலை 2.00 மணிக்கு ஆணைக்குழுவின் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள விலைமனு பெட்டியில் இடவேண்டும். குறித்த திகதிக்குப் பின்னர் சமர்ப்பிக்கப்படும் முன்மொழிவுகள் நிராகரிக்கப்படும்.
  • எந்தவொரு முன்மொழிவையும் ஏற்கவோ அல்லது நிராகரிக்க ஆணைக்குழுவுக்கு முழு உரிமை உள்ளது மற்றும் கொள்முதல் குழுவின் முடிவே இறுதியானது.

 

முன்மொழிவுகளை 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 03ஆம் திகதி மாலை 2:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

 

தலைவர்

இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு

6வது மாடி, இலங்கை வங்கி வர்த்தகக் கோபுரம்

28, செயின்ட் மைக்கேல்ஸ் வீதி,

கொழும்பு 03

தொலைபேசி: 011- 2392608/7

பெக்ஸ்: 011-2392641

ஈ-மெயில்: info@pucsl.gov.lk

இணையதளம்: www.pucsl.gov.lk

10.02.2023