விலக்களித்தலுக்கான உத்தேசம்
விலக்களித்தலுக்கான உத்தேசம்

 

2009ம் ஆண்டு 20ம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் 21 (2) பிரிவின் கீழ் விடுக்கப்படும் அறிவித்தல்.

விலக்களித்தலுக்கான உத்தேசம்

2009ம் ஆண்டு 20ம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் 21 (2) பிரிவிற்கமைய, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ( ”ஆணைக்குழு”)  ஆனது இத்தால் அறியச் செய்வது யாதெனில், சக்தி விநியோக அளவுக் குறைவு மற்றும் அவற்றின் வளாகங்களுள் ஓர் எல்லைக்குட்பட்ட விநியோக வலையமைப்பு காணப்படுவதல் ஆகியவற்றால், குறித்துரைக்கப்பட்ட / முறையான வளாகங்களில் மட்டும் மின்சாரத்தை விநியோகித்தல் மற்றும் வழங்கல் ஆகிய நோக்கங்களிற்காக, ஆணைக்குழு கீழ் வரும் அடையாளங்காணப்பட்ட நிறுவனங்களுக்கு விலக்களிக்க உத்தேசித்து உள்ளது என்பதாகும்.

விண்ணப்ப 

இலக்கம்

நிறுவனம் வளாகங்கள் நுகர்வோரின் இயல்பு
E/AE-D/19/07 இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை  தேசிய விடுமுறை விடுதி,

பெந்தோட்டை 

 

வணிக வகை குடியிருப்பு

மேற் குறிப்பிட்ட முன்மொழிவுகள் தொடர்பான, ஆட்சேபனைகள் (ஏதுமிருப்பின்) அறிவித்தல் வெளியிடப்பட்டு இருபத்து எட்டு (28) நாட்களுக்குள் ஆணைக்குழுவிற்கு எழுத்து மூலமாக அறிவிக்கலாம். அத்துடன் ஆட்சேபனைகளை முன்வைக்கும் போது விண்ணப்பக் குறிப்பு இலக்கத்தினைக் குறிப்பிட்டு முன்வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

 

தலைவர்

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

6-வது மாடி, இலங்கை வங்கி வர்த்தகக் கோபுரம், 28, புனித மைக்கல்ஸ் வீதி, கொழும்பு 03.

தொலைபேசி: (011) 2392608       மின் நகல்: (011) 2392641

மின்னஞ்சல்: licensing@pucsl.gov.lk         இணையத்தளம்: www.pucsl.gov.lk

திகதி: 23.06.2020