பகிரங்க விசாரிப்பு ஒத்திவைப்பு
பகிரங்க விசாரிப்பு ஒத்திவைப்பு

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

(2002 ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் சட்ட பிரிவு 18 க்கு கீழ் வெளியிடும் பொது அறிவித்தல்)

 

2020 ஓகஸ்ட் 17ஆம் திகதி பரிமாற்ற உரிமதாரர் (இலங்கை மின்சார சபை) வலையமைப்பில் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற மின்சார செயலிழப்பு தொடர்பான பகிரங்க விசாரிப்பு ஒத்திவைப்பு

 

பரிமாற்ற உரிமதாரர் வலையமைப்பில் (இலங்கை மின்சார சபை) நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற மின்சார செயலிழப்பு தொடர்பில் 2020 ஓகஸ்ட் 17ஆம் திகதி பகிரங்க விசாரிப்பு கேட்கும் கூட்டமொன்றை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நடத்துவது தொடர்பான முடிவை 2021  ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் திகதி பத்திரிகை அறிவித்தலினூடாக  அறிவித்திருந்தது.

 

மின்சார செயலிழப்பின் விளைவாக மொத்த மின்சக்தி தேவையான 27.5 ஜிகாவொட் மின்சக்தியை வழங்குவதில் பரிமாற்ற உரிமதாரரின் இயலாமை வெளிப்பட்டுள்ளது. இதனை மின்சக்தி கட்டமைப்புக்குள் வழங்க இயலாமை, பொருளாதாரத்திற்கு நான்கு பில்லியன் ரூபாய் (4 பில்லியன்) மதிப்பிடப்பட்ட செலவுக்கு சமமானதாகும், பின்னர் செயலிழப்பு காரணமாக கூடுதலான இழப்புகளும் அடங்கும். சமூக பொருளாதார தாக்கங்களை மட்டுப்படுத்தல் மற்றும் இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் மீண்டும் இடம்பெறுவதை தவிர்ப்பது குறித்த பொருத்தமான பரிந்துரைகளை பெறும் வகையில் பொது பகிரங்க விசாரிப்பு கூட்ட உறுதிபாட்டில் உள்ளடக்கப்பட்டிருந்தது.

பொது பகிரங்க விசாரிப்பு கூட்டத்தை, 2002 ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்ட பிரிவு 15 உடன் பிரிவு 18 இன் பரிந்துரைக்கமையவும், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறையின்படியும் நடத்த ஆணைக்குழுவினால் உத்தேசிக்கப்பட்டது. இப் பகிரங்க கருத்து கேட்டலானது 2021 மே மாதம் 7 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு பௌத்தாலோக்க மாவத்தை, கொழும்பு-07 இல் அமைந்துள்ள பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடாத்த திட்டமிடப்பட்டிருந்தது. நாட்டில் நிலவும் தொற்றுநோய் தாக்கம் காரணமாக இந்த நிகழ்வு ஒத்திவைக்கப்படுகிறது, மேலும் ஆணைக்குழு தீர்மானித்தபடி எதிர்காலத்தில் திகதி குறிப்பிட்டு நடத்தப்படும்.

 

தலைவர்

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

6ஆம் மாடி, இலங்கை வங்கி வர்த்தக கோபுரம்

28, புனித மைக்கல்ஸ் வீதி,

கொழும்பு 03

 02 மே 2021