ஊரடங்கு காலப்பகுதியில் மின் மற்றும் நீரப் பாவனையாளர்களின் வீடுகளிலுள்ள மின்னமைப்புகள் மற்றும் நீர் குழாய்களில்; ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்க விஷேட திட்டத்தில் பதிவுசெய்தல்
ஊரடங்கு காலப்பகுதியில் மின் மற்றும் நீரப் பாவனையாளர்களின் வீடுகளிலுள்ள மின்னமைப்புகள் மற்றும் நீர் குழாய்களில்; ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்க விஷேட திட்டத்தில் பதிவுசெய்தல்

ஊரடங்கு உத்தரவூ பிறப்பிக்கப்பட்டுள்ள இக்காலப்பகுதியில் மின் மற்றும் நீர் பாவனையாளர்களின் வீடுகளிலுள்ள மின் அமைப்புகள் மற்றும் நீர் குழாய்களில்; காணப்படும் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்கும் வகையில் மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட விசேட செயற்திட்டம் ஏனைய மாகாணங்களிலும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை பொலிஸ்இ தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபைஇ இலங்கை மின்சார சபை (இ.மி.ச.)இ தனியார் மின்சார நிறுவனம் (லெகோ) மற்றும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (இ.பொ.ப.ஆ.) நிறுவனங்கள் இணைந்து இந்த விசேட செயல்திட்டத்தை செயற்படுத்தி வருகின்றது.

அந்தவகையில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஹொட்லைன் தொலைபேசி இலக்கத்தினூடாக தங்கள் வீடுகளில் காணப்படும் மின் அமைப்புகள் மற்றும் நீர் குழாய்களில்; ஏற்படும் பிரச்சினைகள் குறித்து அறிவிக்க வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய தங்கள் வீடுகளில் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் மின் மற்றும் நீர் பாவனையாளர்கள் கீழ் காணும் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி அதற்கான சேவையை பெற்றுக் கொள்ளலாம்.குழாய் திருத்த பணியாளரது சேவையை பெற்றுக்கொள்ள 1939 (தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை)மின்னியலாளரது சேவையை பெற்றுக்கொள்ள 1987 (இலங்கை மின்சார சபையின் பாவனையாளர்களுக்கானது) தனியார் மின்சார நிறுவனத்தின் (லெகோ) பாவனையாளர்கள் 1910 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி இச்சேவையை பெற்றுக் கொள்ளலாம். இல்லையெனில் 0764271030 என்ற இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்துங்கள்.

மின்னியலாளர்கள் தங்களது சேவையை வழங்கமுன்பதிவூ செய்யவேண்டும். இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக் குழுவினால் மேற்கொள்ளப்படும் பதிவூகளுக்காக ஆணைக்குழுவின் facebook/pucsl என்ற உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்திலோ அல்லது info@pucsl.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை அனுப்பி வைக்கவூம். மேலதிக தகவல்களுக்கு 011 2392607/8 எனும் இலக்கத்துக்கோ தொடர்பு கொள்ளளவூம்.

1. பெயர்
2. முகவரி
3. தொலைபேசி இலக்கம்
4. பொலிஸ் பிரிவூ
5. கிராம அலுவலர் பிரிவூ
6. பிரதேச காரியாலய பிரிவூ
7. தேசிய அடையாளஅட்டை இலக்கம்
8. வாகன இலக்கம்
9. வாகன வகை
10. மாவட்டம்