‘இலங்கையில் அனல் மின் உற்பத்தியின் வெளிப்புற செலவு மதிப்பீடு’ பற்றிய பொது ஆலோசனை
‘இலங்கையில் அனல் மின் உற்பத்தியின் வெளிப்புற செலவு மதிப்பீடு’ பற்றிய பொது ஆலோசனை

மின் நிலைய கட்டுமானம் மற்றும் செயல்நிலையின் போது ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பிற்கு மேலதிகமாக வளி மாசு, நீர் மாசு, நச்சு பொருட்கள் வெளியாதல் உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்சினைகள் மின் உற்பத்தியின் போது ஏற்படுகின்றன. இந்த சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பாதகமான சமூக மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான வெளிப்புற செலவுகளுக்கு வழிவகுக்கும். இலங்கையில் அனல் மின் உற்பத்தியின் உண்மையான பொருளாதார செலவை மதிப்பிடுவதற்கு துல்லியமான மதிப்பீடு அவசியமாகும்.

மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, இலங்கைக்கு பொருத்தமான புள்ளிவிபரங்களைக் கண்டுபிடிப்பதற்கான ஒரு படியாக இலங்கையில் அனல் மின் உற்பத்தியின் வெளிப்புற செலவை மதிப்பிடுவது குறித்த ஆய்வை இ.பொ.ப.ஆ. நிறைவுசெய்தது. இந்நிலையில், இலங்கையில் புதைபடிவ எரிபொருள் அடிப்படையிலான மின் உற்பத்தியுடன் தொடர்புபடுத்தி இந்த முறையையும், வெளிப்புற செலவுகளையும் சரிபார்க்க இ.பொ.ப.ஆ. உத்தேசித்துள்ளது. 2002 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க இ.பொ.ப.ஆ. சட்டம் மற்றும் 2009 ஆம் ஆண்டின் இலங்கை மின்சாரச் சட்டம் 20 ஆகியவற்றின் கீழ் இந்த ஆலோசனை நடைபெறும். அதன்படி, ‘இலங்கையில் அனல் மின் உற்பத்தியின் வெளிப்புற செலவு மதிப்பீடு’ பற்றிய ஆய்வின் முடிவுகள் குறித்த தங்கள் கருத்துகள் மற்றும் திட்டங்களை எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்க இ.பொ.ப.ஆ., பங்குதாரர்களுக்கு அழைப்பு விடுக்கிறது.

பொது ஆலோசனையின் எழுத்து மூலமான சமர்ப்பிப்புகள் நிறைவடைந்ததன் பின்னர், இறுதி கட்டமாக வாய் மூலமான சமர்ப்பிப்புகளை வழங்குவதற்கு பங்குதாரர்களுக்கு இடமளிக்கப்படும். வாய்மூலமான ஆலோசனைக்கான திகதி மற்றும் ஏனைய விபரங்கள் எழுத்து மூலமான சமர்ப்பிப்புகள் நிறைவடைந்ததன் பின்னர் அறிவிக்கப்படும். ஆலோசனைப் பத்திரம் மற்றும் ஆய்வின் இறுதி வரைவு அறிக்கை ஆணைக்குழுவின் https://www.pucsl.gov.lk/ta/notices இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

எழுதப்பட்ட கருத்துக்களை ஜூலை 3, 2020 அன்று அல்லது அதற்கு முன் ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

ஆலோசனைக்கு பதிலளிப்பதற்கான வழிமுறைகள்,

கீழ் காணும் விலாசத்திற்கு எழுதுங்கள்:

‘இலங்கையில் அனல் மின் உற்பத்தியின் வெளிப்புற செலவு மதிப்பீடு’ பற்றிய பொது ஆலோசனை

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

6ஆவது மாடி, இலங்கை வங்கி வர்த்தகக் கோபுரம்,

28, புனித மைக்கல்ஸ் வீதி, கொழும்பு-3.

அல்லது

www.pucsl.gov.lk என்ற இ.பொ.ப.ஆ.-இன் வலைத்தளத்தை அணுகி இணையத்தில் (ஆன்லைனில்) பதிவுசெய்யுங்கள்.

அல்லது

மின்னஞ்சல் செய்யுங்கள்: consultation@pucsl.gov.lk

தொலைபேசி: (011) 2392608/7

தொலைநகல்: (011) 2392641

முகநூல்: www.facbook.com/pucsl

மேலதிக விபரங்களுக்கு பெருநிறுவன தொடர்பாடல் பிரிவின் உதவி பணிப்பாளர் அனுஷிகா கம்புருகமுவ அவர்களை 0718622800  என்ற இலக்கத்தினூடாக தொடர்புகொள்ளவும்.

திகதி: 12.06.2020