எம் பங்காளர்கள்

Learn about how we work with our different stakeholders, and view a full list of all of our forums, seminars and working groups …

எம் பங்காளர்கள்

நாம் சுயாதீனமாக இயங்கினாலும் இலங்கை அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு அமையவே இயங்குகின்றோம். அத்துடன் சட்டங்களால் வரையறுத்துத் தரப்பட்டுள்ள சட்ட எல்லைக்குள் மின்சார உரிமதாரர்கள், சக்தித் தொழிற்றுறை மற்றும் பிற பங்காளர்களுடன் பணியாற்றுகின்றோம்.

நுகர்வோர்

நுகர்வோரே எமது பிரதான பங்காளர்களில் ஒருவராவர். நாம் நுகர்வோர் அமைப்புகள், நுகர்வோர் உரிமைகள் மன்றம் போன்ற மன்றங்கள், சக்தித் தொழிற்றுறை, சுற்றுச் சூழல் குழுக்கள் ஆகியவை ஊடாக, நுகர்வோருடன் இணைகின்றோம். அத்துடன் தகவலுக்காக அவர்கள் அலுவலக நேரத்தில் எம்மை அணுகலாம்.

உரிமதாரர்கள்

நாம் சிறந்த சேவைத்தரத்தை நாட்டிற்கு வழங்குவதற்காகவும் செயற்பாட்டினை அதிகரிப்பதற்கான வினைத்திறன் மட்டங்களை மேம்படுத்துவதற்காகவும் உரிமதாரர்களுடன் இணைந்துள்ளோம்.

கொள்கை ஆக்குநர்கள் / அமைப்புகள்

இலங்கையின் மின்சாரத் தொழிற்றுறை பற்றியும் அதனை அடுத்தடுத்த கட்டங்களுக்கு எவ்வாறு முன்னேற்றுவது பற்றியும் நாம் கொள்கை ஆக்குநர்களுக்கு பரிந்துரை செய்கின்றோம். அத்துடன் இலங்கையில் தரமான மின்சாரச் சேவைக்காக நாம் அதிகார மையங்களுடன் இணைந்து பணியாற்றுகின்றோம்.