
ஊடக அறிக்கை
இலங்கை மின்சார சபையினால் 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ஆம் திகதி இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு வழங்கிய கட்டண திருத்த முன்மொழிவின் மூலம் 2025 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் 7.7 பில்லியன் ரூபா வருமானப் பற்றாக்குறை ஏற்படும் என்பதால், குறித்த பற்றாக்குறையை ஈடுசெய்யும் வகையில் மின்சாரக் கட்டணத்தை 6.8 வீதத்தால் அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி கோரப்பட்டது. பின்னர், 2025 செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி மற்றும் அக்டோபர் மாதம் முதலாம் திகதி ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைத்த கடிதங்கள் மூலம், 2025 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில், நிதி பற்றாக்குறை 20.8 பில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்படும் என திருத்தி மின்சாரசபையால் சமர்ப்பிக்கப்பட்டது.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட மின்சாரக் கட்டண திருத்த முன்மொழிவு தொடர்பான ஊழியர்களின் பகுப்பாய்வு மற்றும் பொதுமக்களின் ஆலோசனைகளை கேட்டதன் பின்னர் கட்டணங்களை அதிகரிப்பதில்லை எனத் தீர்மானித்துள்ளது. அதன்படி, தற்போது நடைமுறையில் உள்ள மின்கட்டணங்கள், இன்று நள்ளிரவு முதல் அடுத்த கட்டண திருத்தம் வரை அதே தொடரும். 2024 ஆம் ஆண்டு மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் இதுவரை ஐந்து மின்சார கட்டண திருத்தங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாத கட்டண திருத்தத்தை தற்போதைய மின்சார கட்டணத்துடன் ஒப்பிடும் போது மின்சாரக் கட்டணம் 44 சதவீதம் குறைந்துள்ளது. முந்தைய மின் கட்டண திருத்தங்கள் தொடர்பான சுருக்கம் கீழே தரப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட திகதி | ஒப்புதல் சதவீதம் | மின்சார சபை பரிந்துரைத்த சதவீதம் |
05 மார்ச் 2024 | -21.9% | -3.0% |
15 ஜூலை 2024 | -22.5% | -14.0% |
17 ஜனவரி 2025 | -20.0% | 0.0% |
12 ஜூன் 2025 | 15.0% | 18.3% |
மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான முன்மொழிவு தொடர்பாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவி வாயமொழிமூல பொது ஆலோசனை கேட்டல் மற்றும் எழுத்து மூலமும் கருத்துக்களைப் பெற்றுக்கொண்டது. ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கிய ஒன்பது வாய்மொழிமூல கருத்துக் கேட்கும் அமர்வுகள் நடத்தப்பட்டன. சுமார் 500 பேர் எழுத்துமூல மற்றும் வாய்மொழி கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை வழங்க முன்வந்தனர். இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தனது இறுதித் தீர்மானத்தை எடுப்பதில் பொது ஆலோசனையின் போது முன்வைக்கப்பட்ட அனைத்து சாதகமான ஆலோசனைகளையும் இதன்போது கவனத்தில் எடுத்ததுக் கொண்டது. மின்சார கட்டண முறையின் அடிப்படையில் (மின்சார விலை சூத்திரம்) மின்சார கட்டணங்கள் குறித்த இறுதி முடிவை ஆணைக்குழு எடுத்துள்ளது.
இதன்படி, 2025 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் மின்சார சபை முன்வைத்த மின்சார உற்பத்தி மற்றும் விநியோகம் தொடர்பான செலவினங்களிலிருந்து பயனற்ற செலவினங்களைக் குறைக்க ஆணைக்குழு தீர்மானித்தது. அதன்பின்னர் குறித்த பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில், 2024ஆம் ஆண்டின் இறுதி காலாண்டிலும், 2025ஆம் ஆண்டின் முதல் இரு காலாண்டுகளிலும், மின்சார சபை பெற்ற வருமான உபரியாக ரூ. 8,487 மில்லியனை சரிசெய்ய ஆணைக்குழு தீர்மானித்தது.. 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மின்சார சபை 22,875 மில்லியன் ரூபாவை லாபமாக ஈட்டியுள்ளது, மேலும் எதிர்காலத்தில் மின்சார கட்டணத்தை நிலையானதாக வைத்திருக்க, 2025 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் அந்த உபரியில் 1/3 (8,487 மில்லியன் ரூபா ) மற்றும் மீதமுள்ள 2/3 வருமான உபரியை (16,975 மில்லியன் ரூபா) 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இணைத்துக்கொள்ள ஆணைக்குழு முடிவு செய்தது.
இந்தக் கட்டணத் திருத்தத்துடன், இலங்கை மின்சாரசபை மற்றும் தனியார் மின்சார நிறுவனம் ஆகிய நிறுவனங்களுக்கு 7 நிபந்தனைகளை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விதித்துள்ளது. செலவுக் கணக்குகளைத் தயாரித்தல், மின்சார கொள்முதல் ஒப்பந்தங்களைச் செய்துகொள்வது, 2024 இல் மின்சார சபை பெற்றுக்கொண்ட 60,461 மில்லியன் ரூபாய் வருமானம் தொடர்பாக, தடயவியல் தணிக்கை நடத்தி, இருப்பதாக 2026 முதல் காலாண்டிற்கான மின்சார கட்டண திருத்த திட்டத்தில், 16,975 மில்லியன் ரூபாய் லாபத்தை சரிசெய்தல் ஆகியவை நிபந்தனைகளில் உள்ளடங்கும்.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, மின்சார உற்பத்திக்காக போட்டி விலையில் எரிபொருளை கொள்வனவு செய்யுமாறு இலங்கை மின்சார சபைக்கு முன்னர் நிபந்தனைகளை விதித்திருந்ததுடன், இது தொடர்பான மேலதிக நடவடிக்கையாக, அமுல்படுத்தும் உத்தரவை நடைமுறைப்படுத்தவும் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
மின்சாரச் சட்டத்தின் விதிகளின்படி ஆணைக்குழு செயல்படுகிறது மேலும் மின்சார கட்டணங்கள் குறித்த முடிவை எடுப்பதில் அதன் கீழ் அங்கீகரிக்கப்பட்ட விலை சூத்திரம் மற்றும் பொது கலந்தாய்வின் போது வழங்கப்பட்ட அனைத்து நேர்மறையான பரிந்துரைகளும் கவனத்தில் கொள்ளப்பட்டன. பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் தொடர்பாக ஆணைக்குழு மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பான விபரங்களை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவலுக்கு, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பெருநிறுவன தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் திரு.ஜயநாத் ஹேரத் (077 2 943 193) அவர்களை தொடர்பு கொள்ளவும்.