இலங்கையில் கூரைமேலான சூரிய PV அபிவிருத்தி மீதான பொதுமக்கள் ஆலோசனையளிப்பு
புதன், 4 அக்டோபர் 2017 |

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஆனது, 2002 ம் ஆண்டு 35 ம் இலக்கச் சட்டத்தின் படி மின்சாரம், நீர்ச் சேவைகள் மற்றும் பெற்றோலியம் ஆகிய தொழிற்றுறைகளின் ஒழுங்குறுத்துநராக 2002ம் ஆண்டு அமைக்கப்பட்டது.

2002 ம் ஆண்டு 35 ம் இலக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுச் சட்டத்தின் 17(b) பிரிவின் படியும், மற்றும் 2009ம் ஆண்டு 20ம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் 3 (k) பிரிவின் படியும், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது, இலங்கையில் கூரைமேலான சூரிய PV அபிவிருத்தி மீதான பொதுமக்கள் ஆலோசனையளிப்பு ஒன்றை நடத்தத் தீர்மானித்துள்ளது.

அடுத்த 10 ஆண்டுகளுள் அரசாங்கமானது ஒரு மில்லியன் கூரைமேலான சூரிய PV நிலையங்களை ஏற்படுத்த இலக்கிட்டுள்ளது. “சூரிய சக்திக்கான யுத்தம்” நிகழ்ச்சித்திட்டமானது, கூரைமேலான சூரிய PV நிலையங்களை முன்னிறுத்துவதற்காகவே ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சித்திட்டம் 2020ம் ஆண்டில் 200MWp கொள்ளளவினை அடைய இலக்கிட்டுள்ளதோடு, 2025ம் ஆண்டில் அதனை 1000MWpக்கு அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது.

மேற்கூறியதன் வெற்றிகர அமுற்படுத்துகைக்கு ஆதரவளிப்பதற்கான வழிகாட்டிகளை வெளியிடுவதற்கும் அரசாங்கத்தின் கொள்கை இலக்குகளை அடைவதற்கும் ஆணைக்குழு உத்தேசித்துள்ளது.

எம் இணையத்தளத்தில் (www.pucsl.gov.lk) இந்த ஆலோசனையளிப்பு ஆவணம் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அதன் அச்சிட்ட பிரதியானது ஆணைக்குழுவின் தகவல்மையத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

24 ஒக்டோபர் 2017 அன்று அல்லது அதற்கு முன்னர், ஆர்வமுடைய தரப்பினரிடமிருந்து கருத்துகளை, எழுத்துமூல சமர்ப்பிப்புகளாக நாம் வரவேற்கின்றோம்.

கருத்துகளின் விடயப்பரப்புகளாக இவை அமையலாம்:

1. ஏற்கனவேயுள்ள சட்டகவுருக்களை மேம்படுத்தும் பரிந்துரைகள் (உ+ம்: நெட்-மீட்டரிங் விண்ணப்பச் செயன்முறை, நெட்-மீட்டர் பொருத்துகைக்கான மதிப்பு, செலவு, இன்னபிற.)
2. சூரிய PV பொருத்துகைக்கு நிதியளிப்பு, செலவு, மீளளிப்பு மற்றும் நாடு ரீதியாகவும் தனிநபர் ரீதியாகவும் சூரிய PV இன் நன்மைகள் பற்றிய கருத்துகள்
3. பொருத்துகையின் நியமம், வேலைத்திறன் மற்றும் சிறந்த பயிற்சிகள்
4. தொழினுட்பக் கட்டுப்பாடுகள் மற்றும் மின்கட்டமைப்புத் தொடர்புக்கான வாய்ப்புகள்
5. ”சூரியபல சங்க்ராமய” நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட இலக்குகளை அடைவதை உறுதிப்படுத்தும் ஏதாவது ஆலோசனைகள் மற்றும் கருத்துகள்

www.pucsl.gov.lk இன் ஊடாக இணைய வழியில் கருத்து அளிக்கலாம்; அல்லது
consultation@pucsl.gov.lk எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்; அல்லது
www.facebook.com/pucsl எனும் பேஸ்புக் கணக்கு மூலமாக அனுப்பலாம்; அல்லது
பின்வரும் முகவரிக்கு எழுத்துமூலம் அனுப்பலாம்:

Ways to respond
Respond online by accessing www.pucsl.pyxle.info or Email toconsultation@pucsl.gov.lk Or by accessing official Facebook Accountwww.facebook.com/pucsl or write to

இலங்கையில் கூரைமேலான சூரிய PV அபிவிருத்தி மீதான
பொதுமக்கள் ஆலோசனையளிப்பு
தலைவர்
இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு
6 – வது மாடி, இலங்கை வங்கி வர்த்தகக் கோபுரம், 28, புனித மைக்கல் வீதி, கொழும்பு 03.
தொலைபேசி: (011) 2392607/8, தொலை நகல் (011) 2392641