Vacancy Announcement (CCC)
Vacancy Announcement (CCC)

இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

நுகர்வோர் ஆலோசனைக் குழுவில் (CCC) சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான வாய்ப்புகள்

இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சாரத் தொழிற்துறையின் பொருளாதார, தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு ஒழுங்குறுத்துகை மற்றும் இலங்கையில் நீர் சேவைகள் மற்றும் கீழ்நிலை பெற்றோலியத் தொழில்களுக்கான நியமிக்கப்பட்ட ஒழுங்குறுத்துகை அமைப்பாகும். ஆணைகுழுவால் ஒழுங்குறுத்துகை மேற்கொள்ளப்படும் துறைகளில் நுகர்வோர் பாதுகாப்பு அதன் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.

 ஆணைக்குழு பரிந்துரைக்க வேண்டிய பொருத்தமான தரநிலைகள் குறித்து ஆணைகுழுவுக்கு ஆலோசனை வழங்கவும், நுகர்வோரின் தேவைகள் திருப்திகரமாக உள்ளதா என்பதைக் கண்காணிக்கவும் மற்றும் நுகர்வோர் மத்தியில் விழிப்புணர்வை விருத்தி செய்யவும் ஒரு நுகர்வோர் ஆலோசனைக் குழுவை (CCC) நிறுவியுள்ளது. சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களின் ஒவ்வொரு மாகாணத்திலும் ஆணைக்குழுவினால் ஒழுங்குறுத்துகை மேற்கொள்ளும் கைத்தொழில்களில் நுகர்வோர் நலனுக்காக பணியாற்றுவதற்கு தகுதியான ஒருவருக்கு ஒரு வாய்ப்பாக இது இருக்கும்.

விண்ணப்பதாரர்களிடம் எதிர்பார்ப்பது:

  • இந்த அறிவிப்பு திகதியின்படி, 65 வயதுக்கு குறைவானவர்கள்
    • சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு, வடமத்திய மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாணத்தில் நிரந்தரமாக வசிப்பவர்கள்
    • பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாணத்திற்குள் சமூகம் / சமூக சேவைகளில் பணிபுரிந்த/தன்னார்வத் தொண்டு செய்ததற்கான நிரூபிக்கப்பட்ட சான்றிதழ்கள்
    • சிங்களம் அல்லது தமிழ் மொழிகளுக்கு மேலதிகமாக ஆங்கிலத்தில் பணிபுரியும் திறன் விரும்பத்தக்கது.

விண்ணப்பத்துடன் குறித்த விடயங்கள் இணைக்கப்பட வேண்டும்:

  • விண்ணப்பம் (சமூகம்/சமூக சேவை சங்கங்களுடன் பணிபுரிந்த அனுபவம்)
    • குறித்த மாகாணத்தில் உள்ள நுகர்வோரின் விருத்திக்காக அவர்/அவள் எப்படி வாய்ப்பைப் பயன்படுத்த விரும்புகிறார் என்பது பற்றிய சுருக்கமான கட்டுரை (500 சொற்களுக்கு மிகைப்படாமல்)
    • கிராம உத்தியோகத்தர் வழங்கிய வசிப்பிடச் சான்றிதழ்
    • பிரதேசத்தில் உள்ள சிவில் சமூகத் தலைவரால் வழங்கப்பட்டநற்சான்றிதழ்

CCC மற்றும் அதன் உறுப்பினர்களுக்கான குறிப்பு விதிமுறைகள் பற்றிய மேலதிக விவரங்களுக்கு ஆணைக்குழுவின் இணையத்தளத்திலிருந்து (www.pucsl.gov.lk) பெறலாம் அல்லது 0112392607 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக ஆணைகுழுவின்  நுகர்வோர் விவகாரப் பிரிவைத் தொடர்புகொள்ளலாம்.

05 ஏப்ரல் 2024 அன்று அல்லது அதற்கு முன் உங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவும்:

தலைவர்

இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

06-வது மாடி, இலங்கை வங்கி வர்த்தகக் கோபுரம்,

இலக்கம் 28, புனித மைக்கல் வீதி,

கொழும்பு 03

 

தொலைபேசி: (011) 2392607/8 

தொலைநகல்: (011) 2392641

மின்னஞ்சல்:careers@pucsl.gov.lk 

இணையதளம்: www.pucsl.gov.lk

12/03/2024