Joint Press Release – January 23, 2024
செவ்வாய், 23 ஜனவரி 2024 |

கூட்டு ஊடக அறிக்கை

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சு  இலங்கையில் குளிர்சாதன மற்றும் குளிரூட்டி (RAC) தொழில்நுட்ப வல்லுனர்களுக்கான சான்றிதழும் முறையை விருத்தி செய்யும் அடித்தளத்தை உருவாக்குகிறது.

 

  • இலவச தேசிய தொழில் தகைமை (NVQ) வழங்குவதற்கும், குளிர்பதன மற்றும் ஏர் கண்டிஷனிங் தொழில்நுட்ப வல்லுனர்களின் தரப்படுத்தலுக்கான உரிம முறையை உருவாக்குவதற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம்

 

கொழும்பு, 23 ஜனவரி 2024 – இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சாரத் துறையை ஒழுங்குறுத்துகை செய்யும் நிறுவனமாகும், சுற்றுச்சூழல் அமைச்சின் வான் வள முகாமைத்துவம் மற்றும் தேசிய ஓசோன் அலகுடன் இன்று ( 2024 ஜனவரி 23) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. குளிர்சாதன மற்றும் குளிரூட்டி (RAC) தொழில்நுட்ப வல்லுனர்களுக்கான விரிவான உரிம முறையை நிறுவுதல் மற்றும் இலவச தேசிய தொழிற்கல்வித் தகைமையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.

சுற்றாடல் அமைச்சின் செயலாளர் திரு பி கே பிரபாத் சந்திரகீர்த்தி (சட்டத்தரணி), மற்றும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ ஆகியோர் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் வளாகத்தில் இரு நிறுவனங்களின் சார்பாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, தொலை சேவைத் துறைகளில் உள்ள தொழில்நுட்ப வல்லுநர்கள் இரண்டு கட்டங்களாக அதிகாரமளிக்கப்படுவார்கள். முதல் கட்டத்தின் கீழ், குளிர்சாதன மற்றும் குளிரூட்டி மற்றும் தொலை குளிரூட்டல் தொழில்நுட்பத்தில் பணிபுரியும் வல்லுநர்களுக்கு தேசிய தொழிற்கல்வித் தகுதி மட்டம் 3 (NVQ 3) வழங்கப்படும். தற்போது இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் ஆனால் அங்கீகாரம் இல்லாத அனைத்து தொழில்துறை வல்லுனர்களும் இலவசமாக இந்த சான்றிதழ் வழங்கப்படும். தேசிய தொழில் தகைமை (சான்றிதழ்).சுற்றுச்சூழல் அமைச்சீன காற்று வள அபிவிருத்தி மற்றும் ஓசோன் பிரிவு குறித்த  மதிப்பீட்டுகாண பரீட்சை கட்டணத்தையும்,  குறுகிய பயிற்சிக்கான செலவுகள் மற்றும் இறுதி பரீட்சைக்கு தேவையான மூலப் பொருட்கள் ஆகியவற்றுக்கு அனுசரணை வழங்குகிறது, மேலும் இந்த திட்டத்தின் செயல்பாடுகள் பொது பயன்பாடுகள் ஆணைக்குழு மேற்கொள்ளப்படுகின்றன. இலங்கை மற்றும் வான் வள விருத்தி மற்றும் ஓசோன் அலகு தற்போது, 10,000க்கும் மேற்பட்டோருக்கு குளிர்சாதன மற்றும் குளிரூட்டி மற்றும் தொலை குளிரூட்டி தொழில்நுட்ப வல்லுநர்களாக தொழிலில் ஈடுபட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது, மேலும் இவர்களில் அங்கீகரிக்கப்பட்ட தகுதிகள் இல்லாத அனைத்து தொழில்நுட்ப வல்லுனர்களுக்கும் தேசிய தொழில் தகைமை மட்டம் 03 ஐ பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தேசிய தொழில்முறை தகுதி நிலைகள் இலவசமாக வழங்கப்படுகின்றது. இரண்டாம் கட்டமாக தேசிய தொழில் தகைமைகளைப் பெற்ற தொழில்நுட்பவியலாளர்களுக்கான அடையாள அட்டையை அறிமுகப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போதுமான எண்ணிக்கையிலான தொழில்நுட்ப வல்லுநர்கள் தேசிய தொழிற்கல்வி தகைமைமட்டம் 4 (NVQ 4) ஐப் பெற்ற பின்னர் அவர்களுக்கான உரிம முறை ஒன்று நடைமுறைப்படுத்தப்படும்.

 

இந்தத் திட்டத்தின் கீழ் தேசிய தொழில்முறைத் தகுதி நிலை 3ஐப் பெறுவதற்குப் பதிவு செய்ய, 0764271030 என்ற இலக்கத்திற்கு உங்கள் பெயர் மற்றும் மாவட்டத்துடன் வாட்ஸப் அனுப்பலாம்.

மேலதிக விவரங்களுக்கு, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர், பெருநிறுவன தொடர்பாடல் பிரிவின்  ஜயநாத் ஹேரத் 0772943193 அல்லது சுற்றாடல் அமைச்சு வான் வள முகாமைத்துவம் மற்றும் ஓசோன் பிரிவு பணிப்பாளர் அப்சரா மென்டிஸ் அவர்களை 0112034222 தொடர்புகொள்ளவும்.

 

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

சுற்றாடல் அமைச்சு வான் வள முகாமைத்துவம் மற்றும் ஓசோன் பிரிவு

 


Attachments