இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) – இலங்கையில் மின்சாரத் துறைக்கான ஒழுங்குறுத்துநர்.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) – இலங்கையில் மின்சாரத் துறைக்கான ஒழுங்குறுத்துநர்.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது ஒரு சுயாதீன அமைப்பு ஆகும். உயர்மட்ட வெளிப்படைத்தன்மையில் நம்பிக்கை கொண்டுள்ள இந்த அமைப்பானது இலங்கையின் மின்சாரத் துறையின் பொருளாதார, பாதுகாப்பு, தொழினுட்ப அம்சங்களை ஒழுங்குறுத்துவதன் மூலம் தேசிய பொருளாதாரத்தில் ஒரு முக்கிய பங்கினை ஆற்றி வருகின்றது.
மிக முக்கியமாக, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது, இலங்கையின் மின்சாரத் துறையானது போதுமான முதலீடுகள், பாரிய தயார்நிலை, வினைத்திறனுடைய வழங்கல் மற்றும் மின் நுகர்வோர்களுக்கான சேவைகளின் மேம்படுத்தப்பட்ட தரம் ஆகியவற்றைக் கொண்டுள்ளமையினை உறுதிப்படுத்துகின்றது.
நாம் அளிக்கும் பல சேவைகளின் மத்தியில் எமது நோக்கமானது, தற்போதுள்ள நுகர்வோர்களுக்கு மட்டுமன்றி எதிர்கால நுகர்வோர்களுக்கும், சம்மானதும் நிலைபேறானதுமான முறையில் பாதுகாப்பான, நம்பகமான மற்றும் சாத்தியப்பாடான கட்டணமுள்ள உட்கட்டமைப்புச் சேவைகளை உறுதிப்படுத்துவதாகும். இது உள்ளடக்குவன: