இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, தனது சட்டப்பூர்வ அதிகார வரம்பிற்குள் உள்ளடங்கும் பொதுப் பயன்பாட்டுத் தொழில்களை ஒழுங்குபடுத்துவதற்குப் பொறுப்பான ஒழுங்குறுத்துகை நிறுவனமாக, 2002 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டது.
2002 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுச் சட்டத்தின் 37 ஆவது பிரிவுக்கு அமைவாக, ஆணைக்குழுவானது நிதியாண்டில் செயல்படுத்த உத்தேசித்துள்ள ஒழுங்குறுத்துகை, நிறுவன மற்றும் செயல்பாட்டு நடவடிக்கைகளை அடையாளம் கண்டு முன்னுரிமை அளிப்பதற்காக 2027 – 2031 ஆம் ஆண்டுக்கான உத்திசார் திட்டத்தை (செயல்பாட்டுத் திட்டம்) தயாரித்துள்ளது. 2027 – 2031 ஆம் ஆண்டுக்கான மூலோபாயத் திட்டம், ஆணைக்குழுவின் மூலோபாய நோக்கங்கள், ஒழுங்குமுறை முன்னுரிமைகள், திட்டமிடப்பட்ட செயல்பாடுகள், செயல்படுத்தும் காலக்கெடு, செயல்திறன் குறிகாட்டிகள் மற்றும் எதிர்பார்க்கப்படும் விளைவுகள் ஆகியவற்றை கோடிட்டுக் காட்டும் ஒரு முக்கிய திட்டமிடல் மற்றும் பொறுப்புக்கூறல் கருவியாகச் செயல்படுகிறது.
அதன்படி, www.pucsl.gov.lk என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள 2027-2031 ஆம் ஆண்டுக்கான செயல்பாடுகள் குறித்து, பொதுமக்களும் ஏனைய தொடர்புடைய பங்குதாரர்களும் தங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஆர்வமுடைய தரப்பினர் 2026.12.10 அன்றோ அதற்கு முன்போ, இது தொடர்பான தமது எழுத்துமூல சமர்ப்பிப்புகளை செய்யுமாறு கோரப்படுகின்றனர்.
சமர்ப்பிப்புக்கும்முறை:
பின்வரும் முகவரிக்கு அனுப்பலாம்:
“உத்திசார் திட்டம் 2027 – 2031 மீதான பொது கலந்தாய்வு”
இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு
6 வது மாடி, இலங்கை வங்கி வர்த்தகக் கோபுரம்,
இல.28, புனித மைக்கல் வீதி, கொழும்பு 03.
மின்னஞ்சல் மூலம்: info@pucsl.gov.lk
தொலைபேசி: (011)2392607/8
தொலைநகல்: (011) 2392641
தலைவர்
இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு
திகதி: 18.11.2026