ஊடக அறிக்கை 2026 – 11 – 10
நஷனல் சிஸ்டம் ஒபரேட்டர் (NSO) நிறுவனம் சமர்ப்பித்த செலவுக்கான தரவுகளின்படி, 2026 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் மின்சார விநியோகத்திற்கான செலவு 2.88 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆணைக்குழு கவனித்துள்ளது. மேலும், 2026 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 09 ஆம் திகதியன்று, NSO நிறுவனம் புதுப்பிக்கப்பட்ட செலவுத் தரவுகளை மீள சமர்ப்பித்தது. அண்மைய தரவுகளையும், பொது ஆலோசனை கேட்டல் நிகழ்வின் போது சமர்ப்பிக்கப்பட்ட கருத்துக்களையும் ஆலோசனைகளையும் கருத்தில் கொண்டு, இறுதி காலாண்டிற்கு மின்சாரக் கட்டணங்களில் திருத்தம் தேவையில்லை என்றும், மூன்றாம் காலாண்டில் நடைமுறையில் உள்ள கட்டண முறையே இந்தக் காலாண்டிலும் அமலில் இருக்கும் என்றும் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.