Stakeholder Consultation on The Interim Report (2027-2029) of Long Term Power System Development Plan 2027-2046
Stakeholder Consultation on The Interim Report (2027-2029) of Long Term Power System Development Plan 2027-2046

2027-2046 நீண்ட கால மின்சார கட்டமைப்பு விருத்தி திட்டத்தின்

இடைக்கால அறிக்கை (2027-2029) குறித்து பங்குதாரர் ஆலோசனை

 

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின்  பரிந்துரைகளுக்காக, நஷனல் சிஸ்டம் ஒப்பரேட்டர் நிறுவனத்தால் (NSO) தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்ட 2027-2046 நீண்ட கால மின் அமைப்பு அபிவிருத்தித் திட்டத்தின் இடைக்கால அறிக்கை (2027-2029) தொடர்பாக பங்குதாரர்களிடம் கருத்துக்களைக் கோர முடிவு செய்துள்ளதை இதன்மூலம் அறிவிக்கிறது.

 

நஷனல் சிஸ்டம் ஒப்பரேட்டர் நிறுவனத்தால் (NSO) சமர்ப்பிக்கப்பட்ட, 2027-2046 ஆம் ஆண்டுக்கான நீண்ட கால மின்சார விரிவாக்க அமைப்பு திட்டத்தின் இடைக்கால அறிக்கையை (2027-2029) www.pucsl.gov.Ik/notices இதன் வழியாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

 

எழுத்துப்பூர்வ சமர்ப்பிப்புகள் அனைத்தும் எதிர்வரும் 07 செப்டம்பர் 2026 ஆம் திகதிக்கு முன் கீழேகுறிப்பிட்ட முறைமைகள் மூலம் சமர்ப்பிக்கலாம்.

 

வாய்மொழி மூல கலந்தாலோசனை அமர்வு :

திகதி மற்றும் நேரம்: 07 ஆம் திகதி செப்டம்பர் 2026 (காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை)

இடம்: பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபம் (BMICH), கொழும்பு 7.

 

நிகழ்வில் பங்கேற்பதற்கோ அல்லது மேலதிக தகவல்களுக்கு, திரு. ஜயசூரியன் அவர்களை 077 039 39119 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.

 

தலைவர்

இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு,

06வது மாடி, இலங்கை வங்கி வர்த்தகக் கோபுரம்,

இல. 28, புனித மைக்கேல் வீதி, கொழும்பு 03.

 

தொலைநகல்: (011) 2392641

மின்னஞ்சல் முகவரி: consultation@pucsl.gov.lk

தொலைபேசி: (011) 2392607/8

இணையதளம்: www.pucsl.gov.lk

முகநூல்: www.facebook.com/pucsl

 

 

02.09.2026