2002 ஆம் ஆண்டு 35 ஆம் இலக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுச் சட்டம் பிரிவு 17ன் கீழ் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி இந்த அறிவிப்பு வெளியிடப்படுகின்றது
குறைதீர்ப்பு மன்றம் (GRF) மீதான வரைவு விதிகளும், பிணக்கு தீர்வு மீதான வரைவு ஒழுங்குமுறையும் வெவ்வேறு முகமைகளால் செயல்படுத்தப்படும் இரண்டு வெவ்வேறு ஆவணங்களாகும்; இருப்பினும், இவ்விரு ஆவணங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ள முழு செயல்முறையின் நோக்கங்களும் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்கின்றன, மேலும் அவை குறைகளுக்குத் தீர்வு காண்பதும் பிணக்குகளைத் தீர்ப்பதும் ஆகும். இவ்விரு ஆவணங்களையும் ஒன்றாகப் படிக்கும்போது, குறையிலிருந்து பிணக்குகளைத் தீர்ப்பது வரையிலான முழு செயல்முறையையும் நீங்கள் புரிந்துகொள்வீர்கள். கலந்தாய்வு ஆவணத்தின் மீது பங்குதாரர்களின் கருத்துகள் முக்கியமாகப் பின்வருவனவற்றின் மீது வரவேற்கப்படுகின்றன:
2002 ஆம் ஆண்டு 35 ஆம் இலக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுச் சட்டம் பிரிவு 17ன் கீழ் பரிந்துரைக்கப்பட்ட பங்குதாரர் கலந்தாய்வை ஆணைக்குழு நடத்த உத்தேசித்துள்ளது. இத்துடன் தொடர்புடைய கலந்தாய்வுகான ஆவணத்தை இங்கே பதிவிறக்கம் செய்யலாம் www.pucsl.gov.lk
கலந்தாய்வுகான ஆவணம் குறித்து ஏதேனும் எழுத்துப்பூர்வமான கருத்துகள் இருப்பின், அவற்றைச் சமர்ப்பிக்குமாறு பங்குதாரர்களும் பொதுமக்களும் இதன்மூலம் அழைக்கப்படுகிறார்கள். ஆணைக்குழு அத்தகைய சமர்ப்பிப்புகளைப் பரிசீலிக்கலாம் அல்லது தேவைப்பட்டால், பங்குதாரர் கலந்தாய்வின் வாய்மொழி அமர்வில் வாய்மொழி சமர்ப்பிப்புகளை வழங்குமாறு அத்தகைய தரப்பினரைக் கோரலாம்.
2002 ஆம் ஆண்டு 35 ஆம் இலக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுச் சட்டம் பிரிவு 17ன் கீழ் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி வாய்மொழி மூல கருத்துக்களை சமர்ப்பிப்புகளுக்கான அமர்வு ஒன்று நடத்தப்படும். மேலும், ஆர்வமுள்ள தரப்பினர் மேற்கூறிய அமர்வில் தங்கள் கருத்துக்களை முன்வைக்க அனுமதிக்கப்படலாம். எனவே, எழுத்துப்பூர்வமான சமர்ப்பிப்புடன் அமர்வில் பங்கேற்பதில் உங்கள் ஆர்வத்தையும் நீங்கள் குறிப்பிடலாம். வாய்மொழி கருத்துச் சமர்ப்பிப்புகளுக்கான அமர்விற்கான திகதி, நேரம் மற்றும் இடம் ஆகியவை உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும்.
எழுத்துப்பூர்வமான கருத்துக்களை பின்வரும் முகவரிக்கு அல்லது கீழே குறிப்பிடப்பட்டுள்ள பிற முறைகள் மூலமாக 30 ஜூன் 2026 ஆம் திகதி அல்லது முன்னரோ சமர்ப்பிக்கலாம்.
“பொது விதிகளின் வரைவு மற்றும் பிணக்குத் தீர்வு குறித்த வரைவு ஒழுங்குமுறை மீதான பங்குதாரர் கலந்தாலோசனை.”
தலைவர்
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு,
6 ஆம் மாடி, இலங்கை வங்கி வர்த்தகக் கோபுரம், இலக்கம்: 28, சென். மைக்கல்ஸ் வீதி, கொழும்பு 03.
பெக்ஸ்: (011)2392641
மின்னஞ்சல்: consultation@pucsl.gov.lk இணையதளம்: www.pucsl.gov.lk
முகநூல்: www.facebook.com/pucsl
மேலதிக தகவல் மற்றும்/அல்லது தெளிவுபடுத்தலுக்கு, திரு. ஏ.ஜயசூரியன் அவர்களை 077 0399119 என்ற இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும்.