இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

2002 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டம், நாட்டின் பல்துறை உள்கட்டமைப்பு ஒழுங்குமுறை அமைப்பாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நிறுவப்பட்டது. 2009 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டம் உருவாக்கப்பட்டதை தொடர்ந்து, ஆணைகுழுவுக்கு மின்சாரத் துறைக்கான பொருளாதார, பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப ஒழுங்குறுத்துகை அமைப்பாக செயல்படுகிறது.

பின்வரும் பதவியை நிரப்ப துடிப்பான மற்றும் முடிவு சார்ந்த நிபுணர்களைத் தேடுகிறது.

(1) உள்ளக கணக்காய்வாளர்

மட்டம்: பிரதி பணிப்பாளர்

அறிக்கையிடல் – ஆணைக்குழுவின் தலைவர்
தகுதிகள் மற்றும் அனுபவம்

  • இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைகுழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் நிதி/கணக்கியல்/பொருளாதாரம்/வணிகம்/முகாமைத்துவம் ஆகியவற்றில் இளங்கலைப் பட்டம் (SLQFL 6 அல்லது அதற்கு சமமான பட்டம்)

மற்றும்

இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் நிதி/கணக்கியல்/பொருளாதாரம்/வணிகம்/முகாமைத்துவம் (SLQFL 10 அல்லது அதற்கு சமமான பட்டம்) ஆகியவற்றில் முதுகலை பட்டம் (SLQFL 10 அல்லது அதற்கு சமமான பட்டம்)

மற்றும்

  • ACA/ACCA/ACMA CIA இன் தொழில்ரீதியான தகுதிகள்

மற்றும்

  • முகாமைத்துவ மட்டத்தில் குறைந்தது பத்து (10) வருட அனுபவம், அதில் முதல் பட்டம் பெற்றதன் பின்னர் மத்திய முகாமைத்துவ மட்டத்தில் ஐந்து (05) ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.

 

வயது 45 வயதுக்கு குறைவாக இருக்க வேண்டும்.

பொது நிபந்தனைகள்

 

  • மேற்கண்ட பதவி கவர்ச்சிகரமான ஊதியம் மற்றும் பிற சலுகைகளை வழங்குகிறது.
  • விண்ணப்பதாரர் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதிக்கு முன்னர் தேவையான தகுதிகளை பூர்த்தி செய்திருந்தால் மட்டுமே அவர் தகுதி பெற்றவராகக் கருதப்படுவார்.
  • ஒவ்வொரு விண்ணப்பதாரரும் இலங்கை குடிமகனாக இருக்க வேண்டும், பதவியின் கடமைகளை சிறப்பாக நிறைவேற்ற தேவையான உடல், மன ரீதியாக தகுதியானவராகவும், சிறந்த ஒழுக்கக் குணம் கொண்டவராகவும் இருக்க வேண்டும்.
  • அதிகபட்ச தகுதிகள் மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள், மேலும் நேர்காணல்/போட்டித் பரீட்ச்சையில் தேர்ச்சி பெற்ற செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு தெரிவு செய்யப்படுவார்கள்.
  • முழுப் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கங்கள், பிறந்த திகதி, வயது, தேசியம், கல்வி மற்றும் தொழில்முறை தகுதிகள், தொடர்புடைய அனுபவம் மற்றும் உறவினர் அல்லாத இருவரது விபரங்களுடன் கூடிய முகப்பு கடிதம் (கவர் லெட்டர்) கூடிய விண்ணப்பம், 2025.11.27 அன்று அல்லது அதற்கு முன்னர் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட வேண்டும்.
  • விண்ணப்பிக்கும் பதவி நிலையை கடித உறையின் மேல்பக்க இடது மூலையில் அல்லது மின்னஞ்சலின் விடய பரப்பில் குறிப்பிடவும்.

 

தபாலில்: பணிப்பாளர் நாயகம்

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

06-வது மாடி, இலங்கை வங்கி வர்த்தகக் கோபுரம்,

இலக்கம் 28, புனித மைக்கல் வீதி,

கொழும்பு 03

 

மின்னஞ்சல் மூலம்: careers@pucsl.gov.lk

தொலைபேசி: (011) 2392607/8

இணையதளம்: www.pucsl.gov.lk

தலைவர்

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

13.11.2025