
(2002ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டத்தின் 17வது பிரிவின் கீழான பொது அறிவிப்பு)
2009 ஆம் ஆண்டு 20 ஆம் இலக்க மின்சார சட்டத்தின் பிரிவு 30 இன் படி, இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உருவாக்குபவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து பொதுமக்களிடம் கருத்துக்களை (பங்குதாரர் ஆலோசனைகள்) பெற இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான ஆலோசனை பத்திரத்தை www.pucsl.gov.lk என்ற எமது இணையதளத்திற்கு சென்று தறவிறக்கலாம்.
கூரை மேல் சூரிய PV திட்டங்கள் உட்பட மீள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை செயல்படுத்துவதில் குறித்த உருவாக்குபவர்கள் எதிர்கொள்ளுவதில் அடையாளம் காணப்பட்ட சவால்கள் மற்றும் தடைகள் மற்றும் தற்போதுள்ள கட்டமைப்பு குறைபாடுகள் குறித்து பொதுமக்கள் மற்றும் பிற பங்குதாரர்களிடமிருந்து எழுத்துமூல கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் எதிர்வரும் 25 ஆம் திகதி ஏப்ரல் மாதம் 2025 வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
2002ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டத்தின் 17வது பிரிவின் கீழ் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி இந்தப் பொது ஆலோசனை நடாத்தப்படுகிறது.
இது தொடர்பான எழுத்துமூல கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை கீழே உள்ள முகவரிக்கு அல்லது கீழே குறிப்பிட்டுள்ள பிற முறைகள் மூலம் சமர்ப்பிக்கலாம்.
“இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உருவாக்குபவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை அடையாளம் காணும் பொது ஆலோசனை”
தலைவர்,
இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு,
06வது மாடி, இலங்கை வங்கி வர்த்தகக் கோபுரம்,
இல. 28, புனித மைக்கேல் வீதி,
கொழும்பு 03.
தொலைநகல்: 011 2392641
மின்னஞ்சல்: ncre@pucsl.gov.lk
இணைய தளம்: www.pucsl.gov.lk
முகநூல் கணக்கு: www.facebook.com/pucsl
மேலதிக தகவல்களுக்கு, திரு. ஜயசூரியன் அவர்களை 077 0399119 அல்லது 011 2392607/8 என்ற இலக்கத்தினூடாக தொடர்பு கொள்ளவும்.
தலைவர்
இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு
திகதி:03.04.2025