
இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சாரத் தொழிற்துறையின் பொருளாதார, தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு ஒழுங்குறுத்துகை மற்றும் இலங்கையில் நீர் சேவைகள் மற்றும் கீழ்நிலை பெற்றோலியத் தொழில்களுக்கான நியமிக்கப்பட்ட ஒழுங்குறுத்துகை அமைப்பாகும். ஆணைகுழுவால் ஒழுங்குறுத்துகை மேற்கொள்ளப்படும் துறைகளில் நுகர்வோர் பாதுகாப்பு அதன் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.
ஆணைக்குழு பரிந்துரைக்க வேண்டிய பொருத்தமான தரநிலைகள் குறித்து ஆணைகுழுவுக்கு ஆலோசனை வழங்கவும், நுகர்வோரின் தேவைகள் திருப்திகரமாக உள்ளதா என்பதைக் கண்காணிக்கவும் மற்றும் நுகர்வோர் மத்தியில் விழிப்புணர்வை விருத்தி செய்யவும் ஒரு நுகர்வோர் ஆலோசனைக் குழுவை (CCC) நிறுவியுள்ளது. கிழக்கு, தென், மேல், வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களின் ஒவ்வொரு மாகாணத்திலும் ஆணைக்குழுவினால் ஒழுங்குறுத்துகை மேற்கொள்ளும் கைத்தொழில்களில் நுகர்வோர் நலனுக்காக பணியாற்றுவதற்கு தகுதியான ஒருவருக்கு ஒரு வாய்ப்பாக இது இருக்கும்.
விண்ணப்பதாரர்களிடம் எதிர்பார்ப்பது:
விண்ணப்பத்துடன் குறித்த விடயங்கள் இணைக்கப்பட வேண்டும்:
CCC மற்றும் அதன் உறுப்பினர்களுக்கான குறிப்பு விதிமுறைகள் பற்றிய மேலதிக விவரங்களுக்கு ஆணைக்குழுவின் இணையத்தளத்திலிருந்து (www.pucsl.gov.lk) பெறலாம் அல்லது 0112392607 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக ஆணைகுழுவின் நுகர்வோர் விவகாரப் பிரிவைத் தொடர்புகொள்ளலாம்.
விண்ணப்பத்தை 2024 அக்டொபர் 21 ஆம் திகதிக்கு முன் கீழுள்ள முகவரிக்கு அனுப்பிவைக்கவும்.
தலைவர்
இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு
06-வது மாடி, இலங்கை வங்கி வர்த்தகக் கோபுரம்,
இலக்கம் 28, புனித மைக்கல் வீதி,
கொழும்பு 03
தொலைபேசி: (011) 2392607/8
தொலைநகல்: (011) 2392641
மின்னஞ்சல்:careers@pucsl.gov.lk
இணையதளம்: www.pucsl.gov.lk
திகதி: 20.09.2024