2024 ஆண்டுக்கான உத்தேசிக்கப்பட்டுள்ள 2வது மின்சார கட்டண திருத்தம் பொது ஆலோசனை கேட்டல்
2024 ஆண்டுக்கான உத்தேசிக்கப்பட்டுள்ள 2வது மின்சார கட்டண திருத்தம் பொது ஆலோசனை கேட்டல்

2009ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் 30ஆவது பிரிவின் கீழ், உரிமதாரரால் (இலங்கை மின்சாரசபை) 2024 ஆம் ஆண்டிற்கான உத்தேசிக்கப்பட்ட 2வது மின்சாரக் திருத்தக் கட்டணத்தைப் பற்றிய வாய்மொழிமூல பொது ஆலோசனை கேட்டலை 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09ஆம் திகதி, காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடத்தப்படும்.

2002ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டத்தின் 17வது பிரிவின் அமைய பொது ஆலோசனை கேட்டலை நடத்துவற்கான விதிமுறைகளுக்கு அமைவாக நடைபெறும்.

பொதுமக்களின் ஆலோசனைக் கேட்டல் முடிந்த பின்னர் ஆணைக்குழு தனது இறுதி முடிவை ஜூலை மாதம் 15 ஆம் திகதியன்று அறிவிக்கும்.

இந்த மூல பொது ஆலோசனை கேட்டலின் போது, ​​உத்தேசிக்கப்பட்டுள்ள மின்சார கட்டண திருத்தம் தொடர்பான பாதிப்புகள் அல்லது சிக்கல்கள் அல்லது தகவல்கள் குறித்து வாய்மொழியாக சமர்பிக்குமாறு பங்குதாரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இதன் மூலம் அழைப்புவிடுக்கப்படுகிறது.

2024 ஜூலை மாதம் 07 ஆம் திகதிக்கு முன்னர் வாய்மொழிமூல ஆலோசனையை வழங்க கீழே உள்ள ஏதேனும் முறைகளைப் பயன்படுத்தி பதிவுசெய்யவும்.

பதிவுகளுக்கு: 0770 555 166

மின்னஞ்சல்: consultation@pucsl.gov.lk

தொலைநகல்: 011 239 2641

தொலைபேசி : 011 239  2607/8  (அலவலக நேரத்தில்)

 

ஆலோசனை பத்திரத்தை www.pucsl.gov.lk இல் பார்வையிடலாம்

 

தலைவர்

இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு

02/07/2024