அரசாங்க காணி உட்பட குறிப்பிட்ட காணிகளில் வசிக்கும் நுகர்வோருக்கு மின்சார சேவைகளை வழங்குவதற்கு மின்சாரம் வழங்குனர்களுக்கான பொறிமுறையை தயாரிப்பதற்கு பொதுமக்கள் மற்றும் பங்குதாரர்களின் ஆலோசனை
அரசாங்க காணி உட்பட குறிப்பிட்ட காணிகளில் வசிக்கும் நுகர்வோருக்கு மின்சார சேவைகளை வழங்குவதற்கு மின்சாரம் வழங்குனர்களுக்கான பொறிமுறையை தயாரிப்பதற்கு பொதுமக்கள் மற்றும் பங்குதாரர்களின் ஆலோசனை

 

(இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டம் 2002 இலக்கம் 35 இன் பிரிவு 17 இன் கீழ் வெளியிடப்படும் அறிவிப்பு)

 

மாகாண. பொதுமக்கள் மற்றும் பங்குதாரர்களின் கருத்துக்களை (பொது ஆலோசனை) ஆலோசிக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.

 

அரசாங்க நிலம் உட்பட குறிப்பிட்ட நிலத்தில் வசிக்கும் வாடிக்கையாளர்களுக்கு:                                                   

  1. மின்சார சேவைகள், அதாவது புதிய மின்சாரம் வழங்குதல்
  2. மின்சார நுகர்வோரின் மின்சாரக் கணக்கில் பெயர் மாற்றம் செய்தல்
  3. ஒரு குறிப்பிட்ட நிலத்திற்கு மேல், கீழ், மின்பாதையை நிறுவுதல்/ பராமரித்தல் மற்றும் தேவையான மின்சார இணைப்புக்கான அனுமதி
  4. வழி அனுமதியுடன் தொடர்புடைய அசையா மற்றும் அசையும் சொத்துக்களுக்கு இழப்பீடு வழங்குதல்.

 

இந்த பொறிமுறையின் நோக்கம் மின்சார விநியோகஸ்தர்களுக்கு சேவைகளை வழங்கும் போது சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களின் சட்ட அமைப்பில் தலையிடாமல் அத்தகைய சேவைகளை வழங்குவதற்கான வாய்ப்பை வழங்குவதாகும் www.pucsl.gov.lk

என்ற இணையத்தளத்தில் இது தொடர்பான ஆலோசனை பத்திரங்களை பெறலாம்.

 

இந்த பொறிமுறை தொடர்பான ஆலோசனைப் பத்திரம் தொடர்பான பொதுமக்கள் மற்றும் பங்குதாரர்களின் எழுத்துப்பூர்வ கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகள் 31 ஆம் திகதி டிசம்பர் மாதம் 2024 வரை ஏற்றுக்கொள்ளப்படும். அந்தந்த மாகாணத்தில் உள்ள வாய்மொழிக் கருத்துகளின் திகதி குறித்து முன்கூட்டியே அறிவிக்கப்படும். இலங்கைப் பொது மக்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்திலும் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்திலும் இந்த தகவல்கள் வெளியிடப்படும்.

 

இந்த பொறிமுறையுடன் தொடர்புடைய ஆலோசனைகள் தொடர்பான எழுத்துப்பூர்வ      கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை பின்வரும் முகவரிக்கு அல்லது கீழே குறிப்பிடப்பட்டுள்ள முறைகள் மூலம் சமர்ப்பிக்கலாம்.

 

‘அரசாங்க காணி உட்பட குறிப்பிட்ட காணிகளில் வசிக்கும் நுகர்வோருக்கு மின்சார

சேவைகளை வழங்குவதற்கு மின்சாரம் வழங்குனர்களுக்கான பொறிமுறையை

தயாரிப்பதற்கு பொதுமக்கள் மற்றும் பங்குதாரர்களின் ஆலோசனை’

தலைவர்

இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு

6வது மாடி, இலங்கை வங்கி வர்த்தகக் கோபுரம்

28, செயின்ட் மைக்கேல்ஸ் வீதி,

கொழும்பு 03

 

தொலைபேசி: 011- 2392608/7

பெக்ஸ்: 011-2392641

ஈ-மெயில்:  consumers@pucsl.gov.lk

முகநூல்: www.facebook.com/pucsl

 

மேலதிக தகவல்களுக்கு திரு. ரொஷான் வீரசூரியவை +94 76 431 7181 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும்.

2024.06.25