Press Release – 30-April-2024
செவ்வாய், 30 ஏப்ரல் 2024 |

ஊடக அறிக்கை

 

  • மின்னியலாளர்களின் தொழில் தரத்தை உயர்த்தும் நோக்குடன் இலங்கை பொறியியல் பேரவை மற்றும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஆகியன இணைந்த ஐந்தாண்டுத் திட்டம்.
  • மின்னியலாளர்கள், நீர்குழாய் பொருத்துனர்கள், மற்றும் குளிர்சாதன மற்றும் குளிரூட்டி தொழிநுடட்பவியலாளர்களுக்கானஉரிமத் திட்டம்
  • NVQ3 சான்றிதழைஇலவசமாகப் பெறுவதற்கான வாய்ப்பு.

மின்சாரத் துறையின் ஒழுங்குறுத்துகை நிறுவனமான இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் பொறியியற் தொழிலின் தரங்களுக்குப் பொறுப்பான இலங்கைப் பொறியியல் பேரவை ஆகியன இணைந்து மின்னியலாளர்கள், நீர்குழாய் பொருத்துனர்கள், மற்றும் குளிர்சாதன மற்றும் குளிரூட்டி தொழிநுடட்பவியலாளர்களின் தொழில் தரத்தை உயர்த்துவதற்கும் உயர் நிபுணத்துவத் தரத்தைப் பேணுவதற்குமான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இன்று கைச்சாத்திட்டன. இதன் கீழ், மின்னியலாளர்கள், நீர்குழாய் பொருத்துனர்கள், மற்றும் குளிர்சாதன மற்றும் குளிரூட்டி தொழிநுடட்பவியலாளர்களின் தொழில்களுக்கான உரிமம் வழங்கும் முறை மற்றும் தேசிய தொழில் தகைமை மட்டம் 3 சான்றிதழை (NVQ 3) இலவசமாக வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். மேற்கூறிய தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிநுடட்பவியலாளர்களின் உரிய அங்கீகாரம் வழங்குதல், பொருளாதார வளர்ச்சிக்கு பங்களித்தல், பொறியாளர்கள் தொழில்முனைவோராக உயர உதவுதல் மற்றும் பொறியாளர்களின் தொடர்ச்சியான தொழில் வளர்ச்சிக்கு ஆதரவளிப்பது ஆகியவை இந்தப் புரிதலின் முக்கிய நோக்கங்களாகும்.

 

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், தேசிய தொழில் தகைமை மட்டம் 4 தகுதியை பெறும் தொழிநுடட்பவியலாளர்களை பதிவு செய்து, அவர்களுக்கு பொறியியல் தொழில்நுட்ப வல்லுனர்களாக அங்கீகாரம் வழங்கும் துரித திட்டம், பொறியியல் பேரவையால் நடைமுறைப்படுத்தப்படும்.

மின்னியலாளர்களுக்கான உரிம திட்டம் இரண்டு கட்டங்களின் கீழ் செயல்படுகிறது. முதல் கட்டத்தின் கீழ், NVQ 3 கட்டாயமாக்கப்படும் மற்றும் அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும். அதன்படி, அடுத்த ஆண்டு இறுதியிலிருந்து, மின்சாரத் தொழிலில் ஈடுபடுவதற்கு குறைந்தபட்சம் NVQ 3 தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். தற்போது மின்சாரத் துறையில் பணிபுரியும் ஆனால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் இல்லாத அனைத்து  மின்னியலாளர்களும் NVQ 3 சான்றிதழை இலவசமாகப் பெறுவதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. தற்போது, ​​சுமார் 8000 மின் தொழில்நுட்பவியலாளர்களாக, அங்கீகரிக்கப்பட்டு தொழில் வல்லுநர்களாக தொழிலில் ஈடுபடத் தேவையான தேசிய தொழில்முறைத் தகுதிகளைப் பெற்றுள்ளனர்.

மின்னியலாளர்களுக்கான  உரிம முறையின் இரண்டாம் கட்டத்தின் கீழ், 2030 ஆம் ஆண்டு முதல் மின்சாரத் தொழிலில் ஈடுபடுவதற்கு NVQ 4 சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இலங்கை பொறியியல் பேரவையின் கீழ் NVQ 4 தகைமையைப் பெறும்  மின்னியலாளர்களுக்கு அங்கீகாரம் பெற்ற பொறியியல் தொழில்நுட்ப வல்லுநர்களாக அங்கீகாரம் வழங்குவதற்கும் இலங்கை பொறியியல் பேரவை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளது.

 

 மேலும், நீர்குழாய் பொருத்துனர்களுக்கான உரிமம் வழங்கும் முறையின் முதல் கட்டத்தை 2028 ஆம் ஆண்டு ஆரம்பிக்க இலங்கை பொறியியல் பேரவை மற்றும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளன.  நீர்குழாய் பொருத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள ஆனால் தேசிய தொழில்முறை தகுதி இல்லாதவர்களுக்காக இலவச NVQ 3 வழங்கும் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ்,  குளிர்சாதன மற்றும் குளிரூட்டி தொழிநுடட்பவியலாளர்களுக்கான உரிமம் வழங்கும் முறையும் நடைமுறைக்கு வரும். உரிம முறையின் முதல் கட்டத்தின் கீழ், குளிர்சாதன மற்றும் குளிரூட்டி தொழிலில் ஈடுபட தேசிய தொழில்முறை தகுதி மட்டம் 3 சான்றிதழ் கட்டாயமாகும். இரண்டாவது கட்டத்தில், அந்தத் தொழிலில் ஈடுபடுவதற்கு தேசிய தொழில் தகைமை மட்டம் 4 சான்றிதழ் கட்டாயத் தகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. குளிரூட்டல் மற்றும் ஏர் கண்டிஷனிங் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு இலவச NVQ 3 வழங்கும் திட்டமும் 2024 முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஓசோன் பிரிவின் முழு ஆதரவையும் கொண்டுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பெருநிறுவன தொடர்பாடல் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத்தை தொடர்பு கொள்ளவும் 077 2 943 193