க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்கு உதவிய மக்களுக்கு நன்றியை தெரிவிக்கும் ஆணைக்குழு
வெள்ளி, 3 ஜூன் 2022 |

ஊடக அறிக்கை

க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்கு உதவிய மக்களுக்கு நன்றியை தெரிவிக்கும் ஆணைக்குழு

(02.06.2022) க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கக் கூடிய ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வீதித் தடைகளை மேற்கொள்ளக் கூடாது எனவும் பொதுமக்களுக்கு விடுத்த வேண்டுகோளுக்கு சாதகமான பதிலை வழங்கியமைக்காக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறது.

வீதித் தடைகள் மற்றும் போராட்டங்களைத் தவிர்த்து பரீட்சையை நடாத்த பொதுமக்களின் முழு ஆதரவை வழங்க வேண்டும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு  கேட்டிருந்தது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பரீட்சை நாட்களில் மின்வெட்டைக் குறைத்து பரீட்சை எவ்வித இடையூறும் இன்றி நடத்தப்படுவதை உறுதிசெய்ய தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தது. இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க;

“மின்சார தொழிற்துறைக்கான ஒழுங்குறுத்துகை அமைப்பாக, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பரீட்சை நாட்களில் தடையின்றி மின்சார விநியோகத்தை வழங்குவதில் மிகுந்த சிரத்தை எடுத்தது. பரீட்சைகள் திணைக்களம், பரீட்சையில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள், பரீட்சைக்கு தோற்றிய 500,000 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் ஆகியோர் பரீட்சைகளை வெற்றிகரமாக நடத்துவதை உறுதிசெய்யும் வகையில் குறைந்தபட்ச மின்வெட்டு வழங்கப்பட்டது.

இம்முறை பரீட்சையின் போது நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக, பொதுமக்கள் எதிர்ப்பு மற்றும் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக பரீட்சைக்கு இடையூறு ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்பட்டது. எனவே, மின்விநியோகத்தை மட்டும் முழுமையாக வழங்கி தேர்வை தடையின்றி நடத்த முடியாது என்பதை உணர்ந்தோம். எனவே, வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர்க்குமாறும் மாணவர்களுக்கு தடைகளை ஏற்படுத்த கூடாது எனவும் பரீட்சை எழுதிய மாணவர்கள் சார்பில் பொதுமக்கள் கேட்டுக்கொண்டோம். உண்மையில், பரீட்சை நாட்களில் வீதித் தடைகள் அல்லது போக்குவரத்து நெரிசல்கள் குறித்து எந்த முறைப்பாடுகளும் இல்லை. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு செவிசாய்த்து, பரீட்சை நாட்களில் வீதித்தடைகளில் ஈடுபடாமல் தங்களின் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு உதவியமைக்காக எமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று அவர் தெரிவித்தார்.