
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் சட்டம் 17 வது பிரிவில் குறிப்பிட்டுள்ளதன்படி, நீர்ச் சேவை துறையில் இலங்கை அரசாங்கத்துக்கு கொள்கை ஆலோசனைகளை வழங்குவதற்காக மாகாண அடிப்படையில் தொடர்ச்சியாக பொதுமக்களிடம் கருத்துகளை கேட்க நடத்த திட்டமிட்டுள்ளது.
ஆணைக்குழு முன்னிலையில் உங்கள் கருத்துக்களை நேரடியாக முன்வைக்க இது ஒரு சிறந்த வாய்ப்பாகும், எனவே உங்கள் சமர்ப்பிப்புகளை சான்றுகளினூடாக முன்வைக்க வேண்டியது அவசியம். ஆதாரங்களுடன் எழுத்துப்பூர்வ சமர்ப்பிப்புகளை சமர்ப்பிப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
பொதுமக்களிடம் ஆலோசனைகளை நடத்துதல்: (அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட சுகாதார விதிமுறைகளின் அடிப்படையில்)
மாகாணம் | கூட்டம் நடைபெறுமிடம் | கருத்து கேட்டுக்கும் திகதி | எழுத்துமூல சமர்ப்பிப்புக்கள் சமர்ப்பிக்க வேண்டிய இறுதி திகதி |
வடமேல் | குருநாகல் | 27 ஆகஸ்ட் 2020 | 21 ஆகஸ்ட் 2020 |
தெற்கு | காலி | 24 செப்டெம்பர் 2020 | 18 செப்டெம்பர் 2020 |
மத்திய | கண்டி | 22 அக்டோபர் 2020 | 15 அக்டோபர் 2020 |
கிழக்கு | திருகோணமலை | 23 அக்டோபர் 2020 | 15 அக்டோபர் 2020 |
வடமத்திய | அனுராதபுரம் | 19 நவம்பர் 2020 | 13 நவம்பர் 2020 |
வடக்கு | யாழ்ப்பாணம் | 20 நவம்பர் 2020 | 13 நவம்பர் 2020 |
ஊவா | பதுளை | 17 டிசம்பர் 2020 | 11 டிசம்பர் 2020 |
சப்ரகமுவ | இரத்தினபுரி | 18 டிசம்பர் 2020 | 11 டிசம்பர் 2020 |
மேல் | கொழும்பு | 21 ஜனவரி 2021 | 15 ஜனவரி 2021 |
நீர்ச் சேவை துறையில் குடிநீர் மற்றும் வடிகால் ஆகியவை மாத்திரமே உள்ளடங்கும்; போத்தலில் அடைக்கப்பட்ட குடி நீர் மற்றும் நீர்ப்பாசனம் என்பன உள்ளடக்கப்படாது. நீர்ச் சேவைகளின் தேவைகளை பூர்த்தி செய்வதில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து ஆணைக்குழு தயாரித்த ஆலோசனை பத்திரம் மற்றும் படிவத்தை (www.pucsl.gov.lk) எமது இணைய தளத்தில் பதிவிறக்க முடியும். அதன் பிரகாரம் உங்கள் சமர்ப்பிப்புக்கள் தயாரிக்கப்பட வேண்டும். மேலும், இந்த எழுத்துமூல சமர்ப்பிப்பில் உங்களை தொடர்பு கொள்ளும் வகையில் தொலைபேசி இலக்கத்தை குறிப்பிட வேண்டும். ஆலோசனை கிடைக்கிறது.
மேற்குறிப்பிட்ட பொதுமக்களிடம் கருத்துகேட்கும் நிகழ்வில் தங்களது கருத்துக்களையும்
பரிந்துரைகளையும் சமர்ப்பிக்க விரும்புவோர் இறுதி திகதிக்கு முன்னர் தங்கள் கருத்துகளையும் பரிந்துரைகளையும் எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்க வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி: பொதுமக்களிடம் கருத்துக் கேட்டல் “நீர்ச் சேவை”
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு,
6-வது மாடி, இலங்கை வங்கி வர்த்தகக் கோபுரம்,
இல: 28, புனித மைக்கல்ஸ் வீதி,
கொழும்பு 03.
அல்லது
எமது இணையதளம் www.pucsl.gov.lk மூலமாக
அல்லது
மின்னஞ்சல் மூலமாக: consultation@pucsl.gov.lk
அல்லது
முகநூல் : www.facebook.com/pucsl
அல்லது மேலதிக தகவல்களுக்காக அழைக்கவும்,
ஷாந்த 077 2304135, ஜயசூரியன் 077 0399119
தொலைபேசி: + 94-112392607/8 பெக்ஸ்: +94-112392641
திகதி: 2020.07.03
Event Date: 3 Jul 2020 - 13 Jan 2021