செவ்வாய், 9 அக்டோபர் 2018 |

அனைத்து மிக முக்கியமான பொதுப்பயன்பாடுகளில், ஏதாவது ஒரு நகரப் பகுதியில் அல்லது கிராமப் புறத்தில் அமைந்துள்ள ஒரு பொது நீர் விநியோக முறைமையிலிருந்து (நீர் பவுசர்களின் மூல நீர் வழங்கல் அடங்கலாக) வரும் குழாய் நீர் விநியோகம் மற்றும் பொது வடிகாலமைப்புசார் சேவைகள் என்பன இலங்கையில் காணப்படும் நீர் சார்ந்த கைத்தொழிலில் உள்ளடங்குகின்றன. எனினும் நீர்ப்பாசனம் செய்யப்படுகின்ற நீரும் போத்தலில் அடைக்கப்பட்ட நீரும் இதில் அடங்குவதில்லை.

நீர் சார்ந்த சேவைகள் கைத்தொழிலின் ஒழுங்குறுத்துகைப் பணி 2002 ஆம் ஆண்டில் இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டது. எனினும் நீர் சார்ந்த துறைக்கான கைத்தொழில் சட்டம் சட்டவாக்கம் பெறும் வரை இந்தத் துறையை ஒழுங்குறுத்துவதற்கான அதிகாரத்தத்துவம் இந்த ஆணைக்குழுவுக்கு இருக்கவில்லை.

2008 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டு காலப்பகுதியில் நீர் விநியோகமும் துப்புரவேட்பாடும் சார்ந்த கைத்தொழிலின் ஒழுங்குறுத்துகையை இயலச்செய்யும் பொருட்டு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை (தே.நீ.வ.வ.ச) சட்டத்திற்கான வரைவுத் திருத்தங்களைத் தீர்மானிப்பதற்கான உள்ளீடுகள் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டன. நீர் சார்ந்த சேவைகள் கைத்தொழிலில் உத்தேச ஒழுங்குறுத்துகைப் பொறுப்புப்பணியின் எதிர்பார்ப்பில், தற்காலிகக் காலப் பகுதியில் மறைமுக ஒழுங்குறுத்துநராகத் தொழிற்படுவதற்கான தனது எண்ணம் பற்றி நீர் வழங்கல், வடிகாலமைப்புகள் அமைச்சுடன் ஆணைக்குழு தொடர்ந்தும் பேச்சுவார்த்தையை மேற்கொண்டது.